Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday, 30 January 2013

நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்?



நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. Temprorary Relief மட்டுமே.

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை
நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?. இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, Gas Trouble என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும். எனவே Gastric Juice சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும். நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு அக்குபஞ்சர் Needle போட்டால் விரைவாக சரி செய்யலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 27 January 2013

உடம்பில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்வது?



உடம்பில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் பற்றி பார்க்கலாம். இன்றைய தினத்தில் நிறைய பேருக்கு அரிப்பு காணப்படுகிறது.  நிறைய Test எடுத்து பார்த்த பின்பும் எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் நிறைய பேர் தினமும் அரிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம். அது தெரிந்து விட்டால் அதை எளிதாக சரி செய்து விடலாம்.


1.உடம்பில் சத்து குறைபாடு (Vitamins and Minerals and Calcium)  இருந்தால் அரிப்பு ஏற்படும்.

2.கிருமிகள் அதிகம் காணப்பட்டால் தோலில் அரிப்பு ஏற்படும் (Blood Test பார்த்தால் தெரிந்துவிடும்)

3.சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும் போது அரிப்பு ஏற்படலாம்.

4.நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கூட அரிப்பு ஏற்படலாம்.


இதில் எது நமக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு செயல்பட்டால் அரிப்பை சரிசெய்துவிடலாம். இதனோடு அக்குபஞ்சர் Needle போட்டால் விரைவாக சரி செய்யலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday, 22 January 2013

வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா?





வாசகர்கள் அதிகமாக கேட்ட விஷயங்களில் ஒன்று.  எப்படி வயிறு தொப்பையை குறைப்பது? என்பதுதான். எனவே அதைபற்றி இங்கே சில விஷயங்களை தெரிவித்துள்ளேன்.

1. மிக மிக முக்கியமான விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை.

2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time-க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம்.

3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது.

4.Fast Food -சாப்பிடக்கூடாது.

5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும்.

பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும்.

மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்து Fasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting  இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி கடைபிடித்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள். இதையெல்லாம் கடைபிடித்து மற்றும் அக்குபக்ஞ்சர் Needle போட்டுக் கொண்டால் சரி செய்து விடலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 20 January 2013


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது:

மனிதப்பிறவி என்பது கிடைத்தல் அரிது. அதை அடைவதற்கே நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஔவை கூறுவார்கள் இந்த உலகத்தில் அரிது எது என்று!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தவம் கிடைத்துவிட்டால் அதற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார்கள்.

பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புலுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய் கணங்களாய் வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல கஷ்டங்களை கடந்து 7 அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். அந்த 7 வது அறிவு என்பது தான் "ஞான அறிவு" ஆகும்

அந்த 7ஆம் அறிவை கொண்டு யோசித்து செயல்படவேண்டும். 7ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் ஆசை, பணம், புகழ் போன்றவற்றிக்கு நாம் நம்மை அற்பனித்துக் கொள்ள மாட்டோம். 7 ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் இதையெல்லாம் கடந்து நம்முள் இருக்கும். சக்தியை உணர தொடங்கிவிடுவோம். அதாவது சுறுக்கமாக சொன்னால் "உடம்புக்கும், மனதுக்கும் முக்கியதுவம் கொடுக்க தொடங்கிவிடுவோம்". எனவே கிடைத்த இந்த பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாக பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 18 January 2013


மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க ... ... ...


மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று Calcium குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது. எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே Calcium குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே Calcium சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம். அதனோடு அக்குபஞ்சர் Needle போட்டுக் கொண்டால் மூட்டு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகனையும் சரி செய்ய் முடியும் என்பது உண்மையாகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 17 January 2013


நோய் உருவாகும் விதம்:


நமக்கு நோய் பொதுவாக மூன்று வகைகளில் பிரச்சனை தரும். அது எது என்றால் தசைகள், எலும்புகள் மற்றும் நரம்புகள். இதை தவிர்த்து  வேறு ஏதாவது வரப்போகிறதா என்ன? முதலில் சத்து குறைபாடு ஆகிறது என்றால் தசைகளில் தான் பிரச்சனையை காட்டும். உடல் சோர்வு, தசைகளில் வலி என்றாலே தெரிந்து கொள்ளலாம் நோய் ஆரம்பம் ஆகப்போகிறது என்று!. உடனே சத்துள்ள பொருட்களை சாப்பிட்டாலே சரி செய்துவிடலாம். இல்லை என்றால் அடுத்து அதிகமாக குறைபாடு ஆகும் போது எலும்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பின்பு மன உளைச்சல் ஏற்பட்டு
தூக்கமில்லாமல் கனவுத்தொல்லை முதலியன ஏற்படும். இதனால் அதிகமாக யோசிக்கும் போது நரம்புகள் பாதிப்பு ஏற்படும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை ஆகும். கவிஞர் வைரமுத்து அவர்கள் காதலை அழகாக கூறுவார் "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்பார். அது போல் நான் கூறுவது என்னவென்றால், "தசையில் ஆரம்பித்து, எலும்பின் வழியாக கடைசியில் நரம்பின் வழியே முடிவது தான் நோய்". விளக்கம் மனதில் தங்கட்டும் என்பதற்காக கொஞ்சம் வைரமுத்துவை இழுத்துள்ளேன்.

எனவே உடம்புக்கு அக்கறை காட்டுங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 11 January 2013


இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்:

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வாசகர்களாகிய என் நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த நாளில் நம்மிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி புதிய நல்ல எண்ணங்களை நமக்குள் வரவேற்க வேண்டும்.

அதைதான் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று தெரிவித்துள்ளார்கள் நம் பெரியவர்கள். அதன் படி வாழ வாழ்த்தும் 
அன்பு நெஞசம்.


உங்கள்
ஈஸ்வரி


கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....


வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும்,  கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 9 January 2013


வயிற்று போக்கை உடனே நிறுத்த ...


நமது வயிறு சில நேரம் சரியில்லாமல் போய்விடும். பிறகு வயிற்று போக்கு போய்விடும். அவ்வாறு வயிற்று போக்கு போய் விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று சின்ன டிப்ஸ் தரப்போகிறேன். இதில் என்ன விசேஷம் என்றால் ஒரு பைசா செல்வில்லா வைத்தியம் ஆகும். ஆகவே அனைவரும் Note பன்னி வைத்துக் கொள்ளவும்.

வயிற்று போக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை போகிறது என்றவுடன்,

1. நமது தொப்புளில் கை வைத்து touch healing கொடுத்துவிட்டால் வயிற்று போக்கு குறைய தொடங்கும். 

2. ஒரு செம்பில் ஐஸ் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை தொப்புளில் வைத்து, வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு தொடந்து செய்தால் வயிற்று போக்கு தானாகவே நின்றுவிடும்.

3. அதனோடு ஒரு டம்லரில் லெமன், கொஞ்சம் உப்பு மற்றும் சுகர் சேர்த்து குடித்துவிட்டால் போதும், உடனே இழந்த energy உங்களுக்கு கிடைத்து விடும்.

தொப்புளில் உள்ள அக்குஞ்சர் புள்ளி ஒரு அருமையான புள்ளியாகும். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வயிற்று போக்கு தொடங்கியவுடன் இதை செய்ய வேண்டும். அதை விடுத்து 10 தடவைக்கு மேல் போன பின்பு செய்தால் ஒன்றும் செய்ய முடியாது.

சரி ஒருவருக்கு 10 தடவைக்கு மேல் வயிற்று போக்கு போய் விட்டது என்றால் என்ன செய்வது? உடனே அக்குபஞ்சர் மருத்துவரை அனுகி Treatment எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 7 January 2013

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?



மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். பெருங்குடலில் நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொண்டால் போதும், Mucin என்ற திரவம் சுரந்துவிடும். அதனால் மலச்சிக்கல் எல்லாம் சரியாகிவிடும். திராட்சை பழம், பேரிச்சம் பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது. அதை விட்டு விட்டு மாத்திரை போட்டால் அந்த நிமிடம் கேட்குமே தவிர Regular-ராக சரியாக போகாது. எனவே முறையான உணவு முறையை கடைபிடித்து மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 6 January 2013


முகத்தை அழகாக வைக்க வேண்டுமா?


நாம் எல்லோருக்கும் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காக  நாம் நிறைய விஷயங்களை செய்கின்றோம். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால், எவ்வளவு அழகாக இருந்தாலும் அழகு கெட்டுவிடும். எவ்வளவு மேக்கப் போட்டாலும், நன்றாக இருக்காது. முகத்தில் எதனால் பருக்கள் வருகிறது.

தேவையில்லாத கழிவுகள் உள்ளே தங்கிவிடும் போது அது தோல்வழியாக காட்டிவிடும். தேவையில்லாத கழிவுகள் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் முறையாக நடைபெறாமல் இருப்பது மற்றும் சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பது. இதனால் தான் நமது தோலில் பருக்கல் வருகிறது. அதைவிட்டுவிட்டு Lotion மற்றும் Cream போடுவது. Natural Soap மற்றும் Beauty Parlour செல்வது. இது போன்ற எந்த விஷயங்கள் செய்தாலும் பருக்கள் போகாது என்பது தான் உண்மை.

நாம் குழந்தைகளாக பிறக்கும் போது எவ்வளவு நன்றாகத்தான் இருந்தோம். ஆனால் நமது உணவு முறை பழக்கவழக்கங்கள் இதனால், நம் முகத்தை கெடுத்து விடுகிறோம். உள்ளே கழிவு இருக்கும் வரை வெளியே அழகு எப்படி வரும்.

சிறுநீரகம் அதன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.

மாதவிடாய் சரியாக போவதற்கு சில விஷயங்கள் சொல்லியிருந்தேன். அதை கடைபிடியுங்கள் சரியாகிவிடும். மலச்சிக்கல் என்ன செய்யும் என்று தனியாக பின்பு கூற இருக்கிறேன். (தனி Blog). அதனால் தண்ணீர் குடித்து மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முகத்தில் கரும்புள்ளி மற்றும் பருக்கள் போய்விடும். அது மட்டும் அழகு படுத்தி விடாது. முகத்தை சிரித்த படி வைத்துக் கொண்டாலே முகம் பிரகாசமாக இருக்கும். குழந்தை சிரிப்பதனால் தான் அழகாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு முகத்துக்கு வெளியே என்ன Treatment பன்னினாலும் குணமாகாது. எனவே அனைவரும் இதை படித்துவிட்டு ஒரு முறை சிரியுங்கள் அது போதும் எனக்கு.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 2 January 2013


இறைவனிடம் பிராத்தனை செய்வது எப்படி? 


இறைவனிடம் பிராத்தனை செய்வது எப்படி? என்று சொல்ல போகிறேன். என்னங்க இது கூட எங்களுக்கு தெரியாதா? பணத்தை கொடு, அதை கொடு, இதை கொடு என்று கேட்போம். இதில் வரைமுறை உண்டா? என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு கேட்கிறது. ஆம் அதற்கு சில வரையறைகள் உண்டு. என்ன வரங்களை கேட்க வேண்டும் என்பது பற்றி இதில் பார்ப்போம்.

பூஜை அறையில் அமர்ந்தவுடன் வேறு எந்த சிந்தனையும் வரக் கூடாது. மன ஒருமைப்படவேண்டும். பின்பு கடவுளிடம் வரத்தை கேட்க வேண்டும்.

1.இறைவா எப்போழுதும் நீ என்னுடன் துணையாக இருக்க வேண்டும்.
2.எனக்கு நல்ல எண்ணங்களை தர வேண்டும்
3.எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தாங்கும் சக்தியை தர வேண்டும்.
4.பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை தர வேண்டும்.
5.உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

மேற்கண்டபடி இறைவனிடம் நாம் வரத்தை கேட்க வேண்டுமே தவிர இதை கொடு அதை கொடு என்று கேட்க கூடாது. இவ்வாறு இறைவனிடம் பிராத்தனை செய்து பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முத்துக்களாக ஜொலிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday, 1 January 2013

தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?



நாம் அழகாக இருக்க மிக முக்கியமான ஒன்று, தலை முடி ஆகும். ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஏற்பட்டால் மிகவும் அழகு கெட்டுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடி எதனால் உதிர்கின்றது? என்ன காரணங்கள் என்று பார்க்கலாம்.

1.Thyroid Problem
2.வளர்சிதை மாற்றம்
3.வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு
4.சத்து குறைபாடு

இதனால் தான் முடி உதிர்தல் ஏற்படும். அதை விட்டு விட்டு விதவிதமான Shompoo use பன்னுவதால் முடி உதிர்வது குறையாது என்பது தான் உண்மை. வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறாமல் இருக்கும் போது தான் பொடுகு ஏற்படும். அதனால் முடி கழியும். வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற எது தேவை என்றால் சத்துக்கள். உணவு பொருட்களில் அந்த சத்தை நாம் கொடுத்து விட்டால் அது வேலையை சரியாக செய்யும். முடி உதிர்வதும் இருக்காது பொடுகு தொல்லையும் இருக்காது. அதைவிட்டு விட்டு Shampoo வெளியே போட்டால் உள்ளே எப்படி சரியாகும். சற்று சிந்தியுங்கள்.

சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தேங்காய் எண்ணெய்  தேய்ப்பது இந்த இரண்டையும் செய்து வந்தாலே போதும், முடி உதிர்வது இருக்காது. தலைக்கு Shampoo-க்கு பதிலாக செம்பருத்தி இலை சீயக்காய் போன்றவற்றை Use செய்தால் இன்னும் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும் என்பதில் எந்த தடையும் இல்லை. அதாவது உள்ளேயும் கொடுக்க வேண்டும் வெளியேயும் கொடுக்க வேண்டும். இன்று உள்ளவர்கள் தலைக்கு எண்ணை தேய்ப்பதே கிடையாது. நாம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நாக்கு வறண்டு விடுவது பொல எண்ணை தேய்க்கவில்லை என்றால் முடி வறண்டு விடும். அதனால் சரியான முறையை கடைபிடித்து பயன் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 30 December 2012


புத்தாண்டு நல்வாழ்த்துகள்:


அனைத்து வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு இனிய ஆண்டாக இருக்க இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.



நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி


அக்குபஞ்சரில் மாதவிடாய் பிரச்சனை -எளிதாக தீர்க்கும் பிரச்சனையே:


இனறு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. மாதம் ஒரு முறை சரியாக போகவில்லை என்றால் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம், எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

1. Heomoglobin Count குறைவாக இருக்கலாம்.
2. கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கலாம்
3. இரத்தம் குறைவாக இருக்கலாம் (Anemic Problem)
4. Thyrod Problem இருக்கலாம்
5. Iron சத்து குறைவாக இருக்கலாம்
6. Tension அதிகமாக இருந்தால்

இது போன்ற பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு மாதவிடாய் கோளாறு ஏற்படும். அதை எளிதாக சரி செய்து விடலாம் அக்குபஞ்சரில்.

Anemic Problem இருப்பவர்கள் (கருப்பு உலர்ந்த திராட்சை அதாவது கருப்பு கிஸ்மிஸ் பழம்) தினமும் 5-7 பழம் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்த உற்பத்தி ஆகிவிடும்.  முதலில் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருந்தவர்கள், பலம் பெற்று விடுவர். நிறைய கீரை வகைகள், மாதுளம் பழம் சேர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் Iron சத்து கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் Estrogen உற்பத்தி பெறவேண்டுமானால் Calcium சத்து தேவைப்படும். அதனால் பேரிச்சம் பழம் சேர்த்துக் கொண்டால் calcium குறைபாடு சரி செய்து விடும்.

மாதம் மாதம் சரியாக கழிவுகள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். உடம்பு உப்புசம் ஏற்பட்டு உடல் பெருத்து காணப்படும். அந்த கழிவுகள் உள்ளே தங்கிவிட்டால் என்ன செய்ய என்று தெரியாமல் முகத்தில் கரும்புள்ளியாக தோன்றிவிடும். முக அழகே கெட்டுவிடும். Tension அதிகமாக இருக்கும். அதனால் கழிவுகள் வெளியேற உடனே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் இருந்தால் உடனே சரி செய்து விடுங்கள், இல்லை என்றால் பின் கருத்தரிக்க இதுவும் ஒரு தடையாக இருக்கும். அக்குபஞ்சரில் இதற்கு மிக அருமையான புள்ளிகள் உள்ளன. எந்த ஒரு side effect  கிடையாது. சில பேருக்கு இந்த மாதவிடாய் வந்தாலே பிடிக்காது என்பார்கள். அப்படி சொல்லாதீர்கள். இது ஒரு மிக அற்புதமான விஷயம். இது நடைபெறுவதால் தான் மிக அழகான குழந்தை நமக்கு கிடைக்கிறது. வயது வந்தவுடன் அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். சரியாக கழிவுகள் வெளியேறாவிட்டால் அதுதான் கட்டிகளாக மாறிவிடும். பின்பு நமக்குத்தான் பிரச்சனை ஏற்படும். எனவே எல்லோரும் நான் சொன்ன Tips ஐ கடைபிடியுங்கள். மாதவிடாய் என்பது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 28 December 2012


அன்பு:


அன்பு பற்றி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விருப்பப்படுகிறேன். இன்றைய கால கட்டங்களில் அன்பு என்றால் என்ன? என்பது தெரியாமல், அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அன்பு என்பது உள்ளிருந்து வெளிப்படுவதாகும். அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அன்பு என்பது நேசிப்பதாகும். குறுகிய மனம் இருக்காது. பரந்து விரிந்து காணப்படும். சுயநலம் இருக்காது. அன்பு உள்ளவர்கள் பிறருக்காக எதையும் செய்வார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான் அன்பு ஆகும். அன்பு உள்ளவர்களுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். வாங்கத் தெரியாது.

அன்பு உள்ளவர்களிடம் காதல் மலரும். காதல் தெய்வீகமானது.

அன்புக்கு கோபப்படத் தெரியும். தவறு செய்யும் போது கண்டிக்கவும் தெரியும். அன்பு உள்ளவர்கள் மற்றவரை மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். அன்பு உள்ளவர்கள் என்றும் திருப்தியாக இருப்பார்கள்.

ஆனால் இன்று அப்படி இல்லை. Condition போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு விஷயம் சொன்னால் அப்படியே கேட்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பெயர் அன்பு அல்ல அடிமையாகும். அன்பு உள்ளவர்கள் எப்பொழுதும் சுதந்திரம் அளிப்பவர்கள்.

அன்பு உள்ளவர்கள் எப்போழுதும் விட்டுக் கொடுக்கும் மனம் படைத்தவர்கள் ஆவர். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் அவர்களை இழந்து விடுவார்கள்.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி. உதாரணத்திற்கு அப்பா, பையன் அல்லது அக்கா, தங்கை போன்ற எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், அதாவது என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தினால் நீண்ட நாள் உறவு நீடிக்காது என்பது உண்மை. அன்பு என்பது எல்லோரிடமும் காட்டப்படுவது ஆகும். குறுகிய மனம் படைத்தவர்கள் மட்டும் தான் தனக்கு பிடித்தவர்கள் மீது மட்டும் அன்பு வைத்திருப்பார்கள். நன்றாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு பெயர் அன்பு அல்ல பற்று ஆகும். அன்பு ஒரு துளி கூடிவிட்டால் அது பற்றாக் மாறிவிடும். எனவே எல்லோரும் பற்றை அகற்றிவிட்டு, அன்பாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் ஆகும்

அன்புக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 27 December 2012


இத படிங்க முதல்ல ....


இன்று எத்தனை பேருக்கு சுகப்பிரசவம் ஆகிறது? நினைத்தாலே கஷ்டமாக உள்ளது. டாக்டர் கிட்ட check-up-க்கு சென்றால் உடம்பு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறது. கொஞ்சம் Rest எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் தாமதம் உடனே கடைபிடிப்பார்கள். 10 மாதமும் complete rest தான். பின்பு, எப்படி சுகப்பிரசவம் ஏற்படும்?. முதல் மூன்று மாதம் சிரமமான வேலை செய்ய வேண்டாம் என்று தான் கூறி இருப்பார்கள். அதை இவர்கள் காரணம் காட்டி வேலையே செய்வதில்லை. டாக்டர் தான் சொன்னாங்கன்னு சொல்லி சாதித்து கொள்வது. சோம்பேறிகள் தான் வேலை செய்ய பயந்து கொண்டு இப்படி இருக்க வேண்டும். அந்த காலத்தில் வீட்டிலேயே சுக பிரசவம் ஆகிவிடும். 10 குழந்தைகள் பெற்று எடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்று வேலை செய்ய பயந்து கொண்டு 10 மாதமும் Rest எடுப்பார்கள். கண்டிப்பாக சுகபிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். கடினமானதை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தவறில்லை. ஆனால் கர்பினிகள் சுத்தமாக எந்த வேலையுமே செய்யாமல் இருக்காதீர்கள். சுகப்பிரசவம் வலிக்கும் என்று எண்ணி நிறைய பேர் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். தயவு செய்து ஆபரேசன் செய்து கொள்ள கூடாது என்பது எனது வேண்டுகோள் ஆகும்.

கருத்தறித்தவுடன் நமக்கே தெரியும். உடம்பு மிகவும் சோர்வாக இருந்தால் சிறிது Rest எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் தான் நல்லது. Evening தினமும் walking போக வேண்டும்.

சுக பிரசவம் ஆகிவிட்டால் மூன்று நாட்கள் கழித்து நாம் நன்றாக இயங்க முடியும். சீக்கிரம் உடம்பு தேறிவிடும். ஆனால் ஆபரேசன் செய்து கொண்டால் புண் ஆர நாட்கள் ஆகும். முன்பு போல் Normal ஆக இருக்க முடியாது. பல பிரச்சனைகள் ஏற்படும். டாக்டர்கள் சில நல்ல விஷயங்களை உங்களுக்காக சொன்னால் அதை தவறாக உபயோகம் செய்யாதீர்கள். தயவு செய்து வேலைகளை செய்தால் தான் குழந்தை பிறக்கும் போது மிகவும் வலியில்லாமல் எளிதாக பெற்று விடலாம்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 26 December 2012


எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?


நமது உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு  தயவு செய்து அக்கறை காட்டுங்கள். சிறியதாக இருக்கும் போதே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிதாக வலி கூடிய பின்பு உறுப்பை வெட்டி எடுத்துவிடுவது இன்று சாதாரணமாக மாறிவிட்டது. அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. எந்த எந்த உறுப்பு எங்கே இருக்க வேண்டுமோ அந்த அந்த உறுப்பு அங்கே கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பை எடுத்த பின்பு பல பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும். நமது உறுப்புகளில் கத்தி படவே கூடாது. அதை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் வீடு மற்றும் நகை இது போன்ற விஷயங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம்.

அதற்காக ஓடி ஓடி உழைக்கிறோம். உடம்பை கூட பேணி காப்பதில்லை. அப்படி ஓடி வீடு, நகை சேர்த்து விடுவோம். ஆனால்
அதை அனுபவிக்க நாம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் சற்று சிந்தியுங்கள். எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று யோசியுங்கள். நாம் நன்றாக இருந்தால் கடைசி வரை நிம்மதியாக இருக்கலாம். அதனால் நமது ஒவ்வொரு உறுப்புகளும் தான் "தங்கம்" போன்றவை அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒரு பைக்கிள் பிரேக் இல்லை என்றால், அதாவது பிரேக்கை மட்டும் எடுத்து விட்டால் நாம் எப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிபோமோ, அது போல தான் நமது உறுப்புகள் எதுவானாலும், அதை எடுத்து விட்டார்கள் என்றால், நாம் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே உறுப்புகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 19 December 2012


அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:


அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால் அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு படபடப்பு, நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். Hospital போகும் வரை அவர்களுக்கு  ஒரு Relief கொடுக்க முடியும். அக்கு புள்ளிகள் இருதய சக்தி ஓட்டப்பாதையில் Toutch Healing கொடுக்கும் போது அவர்கள் Hospital போகும் வரை பாதுகாக்க முடியும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். என்னுடைய Experience ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் சென்னையில் Local A/C Bus-ல் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு எதிரே ஒரு family நின்று கொண்டு வந்தது. அதில் அப்பா, அம்மா, ஒரு பையன். அந்த பையனுக்கு 9 வயது இருக்கும். திடீரென்று அந்த பையனை அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே வந்தார். முகத்தில் ஒரு பயம் தெரிந்தது மற்றும் பதட்டம் தெரிந்தது. அவன் அப்பா அந்த பையனிடம் எப்படியாவது பொறுத்துக்கொள் என்று கூறிக்கொண்டே வந்தார். உடனே நான் சென்று என்ன பிரச்சனை? என்று கேட்டேன். உடனே அவர் சொன்னார், பையனுக்கு வாந்தி வருகிறதாம் என்றார். மேலும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் A/c Bus-ல் ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் complete close-ஆக இருந்தது. அவருக்கு என்ன செய்ய என்று தெரியாமல் பையனை பொறுத்துக் கொள் என்று கூறிக் கொண்டே வந்தார்.

வாந்தியை Control பன்ன முடியுமா என்ன? உடனே நான் ஒரு அக்கு புள்ளியை சொல்லி Touch Healing செய்ய சொன்னேன். ஒரே ஒரு புள்ளி தான். ஒரே புள்ளியில் தூக்கம் மற்றும் வாந்தியின்மை சரி செய்ய முடியும். நான் அந்த புள்ளியை சொன்னவுடன் அவர் நான் யார் என்பதை தெரிந்து கொள்ள கூட யோசிக்காமல் நேரடியாக உடனே புள்ளியை தொட ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு டென்சனாக இருந்திருப்பார். அந்த புள்ளியை அவர் அமுக்கி கொண்டே வந்தார்.

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. என்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் நின்றவாரே அவங்க அப்பாவை அணைத்தவாரே அவர்கள் இடம் வரும்வரை தூங்கிவிட்டான். இடம் வந்தவுடன் இறங்கும் போது பையனின் தந்தை நன்றி சொல்லி இறங்கினார். இவ்வளவு பெரிய டென்சனிலில் இருந்து அவருக்கு விடுதலை தந்ததை நினைத்து சந்தோஷம் அடைந்தேன்.

இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் அக்கு புள்ளிகளால் அவசர சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் உண்மை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 17 December 2012

எந்த நோயும் உங்களை நெருங்க பயப்படும்:


நோய் வந்த பின் என்ன செய்யலாம்? என்பதற்கு நிறைய மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும். ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. எப்படி நோய்கள் வராமல் தடுப்பது என்பது மட்டுமே. இது  இதுவரை யாருமே சொல்லாதது.

நமது உறுப்புகளை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் வரவே வராது. அதுவும் கல்லீரல் மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை இது போன்ற பல நோய்கள் உருவாகாமல் தடுக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.?

நாம் பல அருவிகளில் குளித்து இருப்போம். குளித்துவிட்டு வந்தவுடன் பார்த்தால் நமது கண்கள் மிகவும் சிவந்து காணப்படும். எவ்வளவுக்கு எவ்வளவு கண்கள் சிவக்கின்றதோ அவ்வளவு உஷ்ணம் நமது உடம்பில் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அப்படி அருவிகளில் குளிப்பதால் அந்த உஷ்ணம் வெளியேறிவிடும். உறுப்புகளும் நன்றாக இயங்க துவங்கிவிடும். அதனால் தான் குளித்துவிட்டு வந்தவுடன் நன்றாக பசி எடுக்கும். அருவிகளில் குளிக்கும் போது என்ன நடக்கிறது என்றால், நமது கண்கள் வழியாக குளிர்ச்சி உள்ளே செல்லும் மற்றும் வாயை திறக்கும் போது நாக்கிலும் தண்ணீர் படும்.  இந்த இரண்டும் நனையும் போது நேரடியாக நீரின் குளிர்ச்சி கல்லீரல் சென்றடையும். 

இதனால் கண் நோய் மற்றும் கண் பார்வை போன்ற கோளாறுகள் குணமாகும். Beauty Parlor ல் வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக்கி கண்கள் மேல் வைப்பார்கள். இதனால் கண் குளிர்ச்சியடையும்.

இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கண் மற்றும் நாக்கு தண்ணீரில் நனைய வேண்டும் என்பது தான். இதை என்றோ ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் நமது கடமைகளில் ஒன்றாக சேர்த்துக் கொண்டால் போதும் உடல் உறுப்புகள் குளிச்சியாகிவிடும்.

இதை எப்படி வீட்டில் செய்யலாம். Shower Bath -ல் தினமும் குளிக்கலாம். வேறு எப்படி செய்யலாம் என்று நீங்களும் சிறிது யோசியுங்கள். ஆனால் கண்கள் தண்ணீரில் நனைய வேண்டும் என்பது முக்கியம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கண்கள் மற்றும் நாக்கு நனையப்பட வேண்டும்.

நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் அடிக்கலாம். நீங்கள் இதை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக பல மாற்றம் ஏற்படும்  என்பது உண்மை. எனவே எல்லோரும் உறுப்புகள் குளிச்சியடைய இன்றே கடமையை செய்ய ஆரம்பியுங்கள். எல்லோருடைய உறுப்புகளும் குளிச்சியடைய வேண்டும், எந்த நோயும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி