Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance
Showing posts with label பகுதி - 3. Show all posts
Showing posts with label பகுதி - 3. Show all posts

Thursday, 8 November 2012

மஞ்சள் காமாலை வரவே வராது !




முதலில் ஆகாயம் (wood) மூலகம் பற்றி பார்க்கலாம். ஏனென்றால் ஆகாயம் மூலகத்திற்கும் மஞ்சள் காமாலை நோய்க்கும் தொடர்பு உண்டு.

ஆகாயம் மூலகத்தில் தடை ஏற்பட்டால் அதனுடைய வெளிப்புற உணர்வான நமது கண்களில் தெரிந்து கொள்ளலாம். இதனால் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் பிரச்சனைகள் ஏற்படும். கல்லீரல் மற்றும் பித்தப்பையில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது நோய் ஏற்பட்டாலும் அதனுடைய சக்தி ஓட்டப்பாதையில் தெரிந்துவிடும். வலி அல்லது வேதனை ஏற்படும். தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. கடவுள் மிக அருமையாக நமக்கு அமைத்து கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்காமல் குறைந்த பட்சம் தினமும் 6 முதல் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.  மறுநாள் நாம் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யும். அதில் கல்லீரல் மற்றும் பித்தப்பை இரவு 11 முதல் காலை 3.00 மணி வரை வேலை செய்யும். ஏனென்றால் கல்லீரலின் வேலை, தேவையான சத்தை எடுத்துக் கொண்டு  மீதமுள்ளதை வெளியேற்றிவிடும். மிகப்பெரிய வேலையை செய்வது இந்த கல்லீரல் தான். நாம் காலையில் இருந்து இரவு படுப்பது வரை சாப்பிடுவதை பிரித்து எடுப்பது தான் இதன் வேலை. எனவே அந்த நேரத்தை, நாம் கல்லீரல் வேலை செய்வதற்கு உதவி செய்தால் போதும். என்ன உதவி  என்று நினைக்கிறீர்களா ? தூங்குவது தான். நாம் அந்த நேரத்தில் தான் வேலை செய்து கொண்டு இருப்போம் அல்லது டி.வி பார்ப்பது அல்லது அந்த நேரததில் சாப்பிடுவது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே அந்த நேரத்தில் தூங்குவது மிகவும் நல்லது.

அதனால் தான் தூக்கம் சரியாக இல்லை என்றால் கண்களில் தெரியும். கல்லீரல் சரியாக வேலையை செய்யவில்லை என்று புரிந்து கொள்ளலாம் தூக்கம் இல்லை என்றால் உடல் உஷ்ணம் ஏற்பட்டால் பல நோய்கள் உருவாகிவிடும். கல்லீரல் குளிச்சியாக வைத்துக் கொண்டால் போதும் எந்த ஒரு நோயும் வராது. முக்கியமாக சர்க்கரை நோய் வரவே வராது. மஞ்சள் காமாலை வரவே வராது.  மஞ்சள் காமாலை ஏற்பட்டாலும் கண்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1. மஞ்சள் காமாலை
2. சர்க்கரை நோய்
3. இரத்த அழுததம்
4. ஞாபக மறதி
5. நரம்பு தளர்ச்சி
6. பக்கவாதம்

இது போன்ற நோய் வராமல் தடுக்கலாம். நரம்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது மிகுந்த  இரத்த அழுத்தம் ஏற்படும் போது அல்லது மன அழுத்தம் ஏற்படும் போது, நரம்பு மண்டலமே பாதிப்பு ஏற்படும். அதனால் தான் கோபம் ஏற்படும் போது நரம்பு மண்டலம் வேலை செய்யும், அதுவும் கண்களில் தெரியும். இந்த ஆகாயம் மூலகத்திற்க்கு தேவையான சுவை புளிப்பு.

டென்சன் ஆகும் போது,  நரம்பு பாதிப்பு ஏற்படும் போது ,  ஞாபக மறதி ஏற்படும். எனவே மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். டென்சன் ஆவதால் தலைவலி ஏற்படும், பசி இருக்காது. எனவே இந்த ஆகாய மூலகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.                                                                                                                
                                                                                                          இன்னும் வரும் ....