Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance
Showing posts with label பகுதி - 4. Show all posts
Showing posts with label பகுதி - 4. Show all posts

Friday, 9 November 2012

திருப்பதி சென்று வாருங்கள் :





இந்தப் பதிவில் காற்று மூலகத்தை பற்றி பார்க்க இருக்கிறோம்.  திருப்பதி செல்வதற்க்கும் இந்த பதிவிற்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது.

காற்று மிக மிக முக்கியமான ஒன்று. மனிதனின் உயிர்நாடி மூச்சுக்காற்றாகும். நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது. 3 முதல் 4 நிமிடங்களுக்கு மேலாக மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபடுமானால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். நம்மை சுற்றியுள்ள காற்றில் 21% ஆக்ஸிஜன் நிறைந்துள்ளது. மூச்சுக் காற்றின் மூலம் நாம் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம்.

மூக்கினால் உறிஞ்சப்படும் காற்றை நுரையீரல் உடனே எடுத்துக் கொள்ளாது, மூச்சுக் காற்றிலுள்ள நஞ்சுப்பொருட்களை வடிகட்டும். மூச்சுக் காற்றிலுள்ள தூசு குப்பைகளை "இருமல்" "தும்மல்" என்னும் செயல்கள் மூலம் வெளியேற்றுகின்றது. மூக்கு சுவாசம் செய்வதற்க்கும், நுகர்தல் என்னும் செயலுக்கும் உதவுகிறது.

இந்த காற்று மூலகத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதனுடைய சக்தி ஓட்டப் பாதையில் தெரிந்துவிடும். அதனால் தான் காற்று மூலகத்தில் பிரச்சனை என்றால் அதனுடைய வெளிப்புற உறுப்பான் மூக்கில் தெரிந்துவிடும்.

ஆக்ஸிஜன் கலந்த காற்று மூக்கின் துவாரத்தின் வழியாக நுரையீரலுக்குள் செல்கிறது. மூக்கு துவாரத்திலுள்ள சுரப்பிகள் காற்றின் வெப்பநிலையை சமநிலையக்குகிறது. நுரையீரலிலுள்ள காற்று சிற்றறைகளில் முழுவதும் ஆக்ஸிஜன் நிரப்பிக் கொண்ட பின், கார்பன் டை ஆக்ஸைடு வெளிவந்துவிடுகிறது. இதுவே காற்றின் பரிமாற்றம் எனப்படும்.

நலமுள்ள ஒருவர் ஒரு நிமிடத்தில் 14 முதல் 18 முறை மூச்சை இழுக்கிறார். நாம் பெரும்பாலும் மூச்சை இழுப்பதும், விடுவதுமில்லை. இதனால் காற்று நுண்ணறைகள் முழுவதும் நிரப்ப்படுவதில்லை. அதனால் உடம்பில் உள்ள திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல் உறுப்புகளில் நலம் கெடும். எனவே சரியான மூச்சுப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்க்கு உறுதுணையாக இருக்கும்.

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எந்த காற்றுமே கிடைப்பதில்லை. அவசர உலகத்தில் போய் கொண்டு இருக்கிறோம். விடுமுறை நாட்களில் காற்று நிறைந்துள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தாலே உடமபுக்கு நன்றாக இருக்கும். எவ்வளவு மனம் பாறமாக இருந்தாலும் காற்று உள்ள இடங்களுக்கு சென்று அமைதியாக அமர்ந்து நல்ல காற்றை உள்வாங்கி கொண்டாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.

உதாரணத்திற்கு, சென்னையில் எல்லோரும் Beach -க்கு செல்கிறார்கள். அங்கே சென்று அந்த கடற்கரை அருகில் அம்ர்ந்து அந்த குளிந்த காற்று பட்டவுடன் மிகவும் சுகமாக இருக்கும். அதான் Beach -க்கு போயிட்டு வந்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம். எனவே இனிமேல் தயவு செய்து நல்ல காற்றை சுவாசிப்போம். நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் வரும். நல்ல காற்று கிடைக்க வில்லை என்றால்,

1. இருமல்
2. மூச்சிறைப்பு
3. தும்மல்
4. தோல் நோய்கள்
5. தசைகளில் வலி
6. சைனஸ்

மூச்சு சம்மந்தப்பட்ட அனைத்தும் வரும். திருப்பதி போன்ற மலை உச்சிகளுக்கு சென்று வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அங்கு மூலிகை மரங்கள் அதிகம் இருப்பதால் அந்த காற்று பட்டவுடன், உடம்பு மற்றும் மனம் இரண்டுமே சரியாகிவிடும்,. திருப்பதிக்கு போகும் போது மலை உச்சியில் ஏறும் போது இவ்வளவு நாள் தூக்கமில்லை என்று சொன்னவர்கள் அனைவரும் தூங்கிவிடுவார்கள். ஏனென்றால், அவ்வளவு நல்ல காற்று கிடைக்கிறது.