Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance
Showing posts with label பகுதி -1. Show all posts
Showing posts with label பகுதி -1. Show all posts

Monday, 5 November 2012

அக்குபஞ்சர் - உங்கள் வாழ்வில் !



எல்லாம்வல்ல இறைவன் ஈஸ்வரன் ஆசிர்வாதத்துடன் நான் என் கருத்துக்களை எழுத ஆரம்பிக்கிறேன்.

நான் படித்த அக்குபஞ்சரில்  உங்களுக்கு பயனுள்ள சிலவற்றை தருகிறேன். அக்குபஞ்சர் பற்றி கூறுவதற்கு முன் சில இயற்கை மருத்துவ முறைகளை பற்றியும் நாம் பின் பற்ற வேண்டியவை  பற்றியும் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழ்வில் தினசரி உணவில் மூன்று வேலையும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்


பஞ்சபூதங்களின் தொகுப்பே மனிதனின் உடல். 

பஞ்சபூதங்கள் என்பவை யாவை ?

1. நெருப்பு

2. காற்று

3. நீர்

4. நிலம்

5. ஆகாயம்

இவைகளை கொண்டவை பஞ்சபூதங்கள்.

இந்த பஞ்சபூத மூலகங்கள் ஏதாவது ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் அது மனித உடலின் வெளிபுற உறுப்புகளில் வெளிப்படும்.


நெருப்பு  -   நாக்கு

காற்று   -   மூக்கு

நீர்       -   காது

நிலம்    -   உதடு

ஆகாயம்  -  கண்


இந்த பஞ்சபூதங்களுக்கும் கீழ் கண்ட சுவைகளுக்கும் ஒற்றுமை உண்டு. அதை பின்பு எழுத இருக்கிறேன்.


நெருப்பு  -   கசப்பு

காற்று   -   காரம்

நீர்       -   உப்பு

நிலம்    -   துவர்ப்பு, இனிப்பு

ஆகாயம்  -  புளிப்பு

நமது உடம்பு பஞ்சபூதங்களின் அடக்கம் என்பதால், அதற்கு தேவையான சுவையை கொடுத்துவிட்டால் எந்த நோயும் வரவே வராது.

வாயை மூடி நன்றாக மென்று சாப்பிட்டால் நமக்கு தேவையான முழுமையான சத்து கிடைத்துவிடும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி செய்தால் உணவு முழு செரிமானம் பெற்று நல்ல இரத்தமாக கிடைக்கும்.

இந்த அவசர உலகத்தில் யாருமே பொறுமையாக சாப்பிடுவதில்லை. பசித்து சாப்பிடுவதில்லை. பின்பு நோய் வராமல் என்ன வரும் ?  வந்த பின் யோசிப்பதை விட வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம். அக்குபஞ்சர் வரும் முன் காக்கும் வைத்தியம் ஆகும். வந்தாலும் சரி செய்யலாம்.


நோய் வராமல் தடுக்க நாம் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள்.

1.வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்.

2.ஆறு சுவைகள் தர வேண்டும்.

3.பசிக்கும் போது சாப்பிட வேண்டும்.

4.தவிக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும்.

5.தூக்கம் வரும் போது தூங்க வேண்டும்.

6.சிறு, சிறு உடல் பயிற்சிகள் தர வேண்டும்.

இதை செய்து வந்தாலே போது எல்லாம் ஓடி விடும்.


இன்னும் ஆழமாக சொன்னால்,

1.நெருப்பு என்றால்    -  உழைப்பு தேவை

2.நீர் என்றால்        -  தண்ணீர் தேவை

3.காற்று என்றால்     -  இயற்கை காற்று தேவை (Fan காற்று அல்ல)

4.ஆகாயம் என்றால் -  தூக்கம் தேவை

5.பூமி, நிலம் என்றால் - உணவு தேவை

மேலே குறிப்பிட்டு உள்ளபடி உழைப்பு, தண்ணீர், காற்று, தூக்கம், உணவு இதை எல்லாம் சரியாக உடம்புக்கு கொடுத்து விட்டால் உடம்பு தானாகவே அதன் வேலையை செய்து கொள்ளும்.

யார் இன்று நன்றாக உடம்பிற்க்கு உழைப்பை கொடுக்கிறார்கள். தண்ணீர் கூட சரியாக குடிப்பது கிடையாது. அதற்கு பதில் மற்ற குளிர்பானங்களை குடிக்கிறார்கள். நன்றாக உடம்பிற்க்கு உழைப்பை கொடுக்கவில்லை என்றால் நெருப்பு மூலகம் செயல் குறைபாடு ஏற்படும். அது சம்மந்தப்பட்ட நோய் உருவாகும்.

தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால், அது சம்மந்தப்பட்ட நோய் உருவாகலாம். இது போலத்தான் ஒவ்வொரு பஞ்சபூத வேலையை சரியாக இயங்க நாம் உதவி செய்வது கிடையாது.

ஓர் உதாரணத்திற்கு கூறுகிறேன்.

தண்ணீர் சரியாக குடிக்க்வில்லை என்றால், நம் உடம்பின் தேவையில்லாத கழிவுகளை பிரித்து எடுக்கும் சிறுநீரகம் கழிவுகளை வெளியெற்றி ஆக வேண்டும். ஆனால் அதற்கு தண்ணீர் இருந்தால் தான் வேலையை செய்யும். இல்லை என்றால் கழிவுகள் வெளியெற மிகவும் சிரமமாகும். பாதி வெளியெறி பாதி உள்ளேயே தங்கிவிடும் போது தான், சிறுநீரகக்கல் தோன்றுகிறது. இது தேவையா ?. அது மட்டும் அல்ல மலச்சிக்கல் ஏற்படும். முகப்பருக்கல் ஏற்படும். எலும்பு சம்பத்தப்பட்ட  நோய் ஏற்படும்.  இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதற்க்கு நாமே காரணமாக ஆகி விடுகிறோம்.

இதில் என்ன ஒரு பெரிய ஜோக் என்றால் தவறுகளுக்கும் நாமே காரணமாக மாறிவிட்டு கடவுளை திட்டுவது " எனக்கு போய் இந்த
நோயை கடவுள் கொடுத்துவிட்டாரே " நான் யாருக்கும் எந்த துரோகம் செய்யவில்லையே எனக்கு ஏன் இப்படி ? " என்று வேதாந்தம் பேச வேண்டியது தான்.

இனிமேல் அதை எல்லாம் விட்டுவிட்டு நம்மளுடைய தவறுகளை திருத்திகொண்டால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.





For further information pls send e-mail easwarisaravana@gmail.com
contact number : 9445772438
sdfahttp://www.easwarisaravana.blogspot.in/