Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday, 28 March 2013

தானம் செய்யும் எண்ணம் எப்படி வரும்?




பணம் தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன். சில பேர் பணத்தை உபயோகிப்பதே கிடையாது. அதுவும் தவறுதான். அதாவது "கருமி" தனம் இருப்பது மிகவும் கஷ்டத்தை கொடுக்கும். நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வந்தேன். "பணத்தோட அருமை எனக்கு தான் தெரியும்" என்று சொல்லி நிறைய வீட்டில் பணத்தை செலவு செய்வதே கிடையாது. பணத்தை சேர்த்து வைப்பதால் அனுபவித்த சுகம் இருக்காது. பணம் சம்பாதிப்பதே நமது தேவைகளுக்காகத் தான். அதை சரிவர உபயோகிக்க வேண்டும். 

நமது தேவைகளுக்காக செலவு செய்வது தவறில்லை. இன்று அனுபவிக்க வில்லை என்றால் நாளை ஏமாற்றத்தை தரும். போகும் போது எதையும் எடுத்துச்செல்லப்போவதில்லை.  எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் செல்லப்போகிறோம். அதனால் அனுபவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். பணத்தை அனுபவிக்க கற்றுக்கொண்டால், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும். அதனால் மன அமைதி கிடைத்துவிடும்.

முதலில் நாம் நம் பணத்தை அனுபவிக்க தயங்கினால், தானம் செய்யும் எண்ணம் எங்கிருந்து வரும்?


எனவே தானும் அனுபவித்து பிறருக்கும் கொடுத்து உதவுவோம்.

நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 25 March 2013

யார் பணக்காரர் தெரியுமா?



நமது ஆசைகள் தான் கஷ்டத்தை தருகின்றன என்று சொல்லி இருந்தேன். ஆசை படாமல் இருக்க முடியுமா?. முடியாது, அப்படி ஆசைகள் கிடையாது என்று சொன்னால் அது பொய். பின்பு ஏன் ஆசைகள் தான் கஷ்டம் என்று கூறுகிறேன் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு உதாரணத்திற்கு வீடூ வாங்க வேண்டும் என்ற எண்ணம், அதாவது "ஆசை" இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாராளமாக வாங்கலாம் தவறில்லை. அதை வாங்குவதற்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம். நமக்கு தேவையான எல்லா வசதிகளும் அந்த வீட்டில் இருக்கிறதா என்று பார்க்கிறோம். வேறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது கிடையாது.

வீடு  40 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். கையில் 20 லட்சம் இருக்கிறது என்று  வைத்துக்கொள்வோம். மீதி 20 லட்சத்துக்கு வட்டிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த வட்டியை நாம் மாதம் மாதம் கட்டமுடியுமா? அந்த நிலையில் இருக்கிறோமா என்று யோசியுங்கள். அப்படி அந்த வட்டியை கட்டினால் நமது Budget பிடிக்காமல் இருக்கிறதா? என்று யோசியுங்கள். உங்களால் முடியும் என்றால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை . ஆனால் கட்டமுடியாத நிலையில் இருக்கும் போது, அதை வாங்க ஆசைபட்டால் நிச்சயம் கஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அந்த ஆசை தான் இருக்க கூடாது.

இது போன்று தான் எல்லா விஷயங்களில் தவறு செய்கிறோம். வரும் வருமானத்தை வைத்து சிக்கனமாக செலவு செய்து, நமது தேவைகளுக்காக சிலவற்றை செலவு செய்து மற்றும் சேமிப்பு செய்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது கடன் இல்லா வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று கூறுகிறேன். "இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொண்டால் அவன் தான் பணக்காரன்" என்பது உண்மையாகும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 22 March 2013

சுதந்திர பறவைகளாய் மாறுங்கள் !



 


மனிதனாய் பிறந்து எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. யாரிடம் கேட்டாலும் என்னால் கஷ்டங்களை தாங்கி கொள்ள முடியவில்லை என்று தான் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். ஆனால் கஷ்டங்களை விட்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?


அதாவது தவறு செய்வது இயற்கை. ஆனால் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது தான் குற்றம் ஆகும். குழந்தைகளாக பிறந்த உடனே, இந்த மண்ணில் காலடி பட்டவுடன் கஷ்டங்களை சந்திக்க தயாராகி விடவேண்டியிருக்கிறது. கஷ்டங்களுக்கு ஒரு அழகான விளக்கம் தரப்போகிறேன். குழந்தைகளாக இருக்கும் போது, அதாவது படிக்கும் காலத்தில் படிப்பது கஷ்டமாக இருந்து இருக்கும். கல்லூரி பருவத்தில் "காதல் பிரச்சனை" மற்றும் அட்வைஸ் கேட்பதே பிடிக்காத காலம். அந்த பருவத்தில், அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து இருக்கும்.

இது போல் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை தாங்க முடியவில்லை என்று தான் கூறுகிறோம். ஆனால் இதில் என்ன ஒரு உண்மை என்றால், நாம் கடந்து வந்த கஷ்டத்தை இன்று நினைக்கும் போது அது சிரிப்பாக கூட இருக்கும். இது மிகப்பெரிய உண்மை ஆகும். எல்லோரும் உங்களை ஆராய்ந்து பாருங்கள். அதனால் எதற்கும் கவலை படாதீர்கள். என்ன செய்யலாம் எப்படி face பண்ணலாம் என்பதை பற்றி யோசியுங்கள். உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வாருங்கள் ! சுதந்திர பறவைகளாய் மாறுங்கள் ! சந்தோஷம் அடையுங்கள் !

நன்றி
,

 
அன்புடன்
,
ஈஸ்வரி

Wednesday, 20 March 2013

எளிமை - இதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?



நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான மற்றொன்று எளிமையாக இருப்பது. "எளிமை" என்ற வார்த்தைக்கு நிறைய பேர் அர்த்தம் தெரியாமல் தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். எளிமை என்பது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். நம்மிடம் இருப்பதை அனுபவிப்பது அல்லது இல்லாததை நினைத்து வருந்தம் அடையம் இருப்பது. அது தான் எளிமை ஆகும். ஒரு உதாரணத்திற்கு உன்னிடம் 10 பவுன் தங்க செயின், ஒரு கார் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை அனுபவிப்பதில் தப்பில்லை. அது உன்னுடையது. அதை தாராளமாக அனுபவிக்கலாம். அதை அனுபவிக்காமல் எந்த நகையும் போட பிடிக்காது, காரில் போக கூட பிடிக்காது என்று சொல்லி எளிமையாக வாழ்வது என்று எண்ணி தவறு செய்கிறார்கள். ஆனால் அவருக்கு வேறு ஏதாவது ஒரு பொருள் மீது ஆசை இருக்கும் அதையே பிடித்துக் கொண்டு இருப்பார்கள். இல்லாததையே நினைத்து வருத்தம் அடைவதால், இருப்பதையும் அனுபவிக்காமல் தவற விட்டு விடுகிறோம். அதனால் இருப்பதை அனுபவியுங்கள்.


எளிமை என்பது ஆடை, ஆபரணங்களில் அல்ல, மனம் சம்மந்தப்பட்டது. உனது பேச்சில் உனது எளிமை தெரிந்து விடும். அதாவது உண்மை தான் எளிமை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும். ஒரு உதாரணத்திற்கு ஒருவருக்கு சொத்தின் மீது ஆசை இருக்கும். ஆனால் வெளியே சொல்லும் போது "எனக்கு எந்த ஆசையும் கிடையாது" என்று கூறுவார். உள்ளே தோன்றுவது ஒன்று, வெளியே சொல்வது ஒன்று. இது அவரையே அவர் ஏமாற்றிக் கொள்கிறார் என்று அர்த்தம். அதனால் எளிமையாக வாழ கற்றுக் கொண்டால் இறைவன் உங்கள் பக்கம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 18 March 2013

கஷ்டங்கள் குறைய வேண்டுமா?




நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்பது கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமது பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ளாதது தான். நல்லவர்களை எப்படி அறிந்து கொள்வது?.அது எந்த உறவாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.பொதுவாக நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது யாரிடமாவது சொல்லி மன ஆறுதல் அடைய முயற்சி செய்வோம். அப்படி நம் கஷ்டத்தை ஒருவரிடம் சொல்லும் போது அவர் நமக்கு நல்லதையே சொல்லி நம் மன பாரத்தை குறைத்து விடுகிறார் என்றால் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

2.வெறுமனே கஷ்டத்தை கேட்டுவிட்டு சென்றாலோ அல்லது இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலோ, அவரிடம் நட்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. 

3.அது போல் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கூறும் போது அவரும் சந்தோஷம் அடைய வேண்டும். மாறாக சந்தோஷம் அடையவில்லை என்றால் அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

எனவே முதலில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொண்டு பின்பு பழகினால் உங்கள் கஷ்டங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 6 March 2013

எதையும் செய்யும் ஆர்வம் எப்படி வரும்?




நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று அடுத்தவரை ஊக்கப் படுத்துதல் ஆகும். ஆனால் அதை இன்று யாரும் செய்வதில்லை. யாரு எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை ஊக்கம் அளித்து பாருங்கள். அவர்கள் முகத்தில் பிரகாசம் தெரியும். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, வாய்விட்டு வெளியே மனதில் இருந்து பாரட்டுங்கள். முக்கியமாக யார் நல்ல விஷயம் செய்கிறார்களே அவர்களிடம் நேராக பாரட்ட வேண்டும். சில பேர் நேரடியாக சொல்லாமல் மற்றவர்களிடம் சொல்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதால், அவருக்கு எப்படி விஷயம் போய் சேரும். அப்படி நாம் மற்றவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் போது, நாமும் மகிழ்ச்சி அடைவோம் என்பது தான் உண்மை. மற்றவர்களை மகிழ வைக்க நினைக்கும் போது நாமும் மகிழ்ச்சி அடைவோம். சில பேர் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். வெளியே வாய்விட்டு பேசும் போது தான் பல விஷயங்கள் புரியும்.

ஒரு உதாரணத்திற்கு மனைவி செய்யும் சமையல் நன்றாக இருக்கும். ஆனால் ருசித்து மட்டும் விட்டு விட்டு போய்விடுவோம். அதற்கு பதிலாக அவரிடம் நேரிடையாக நீ செய்த சமையல் சூப்பர் என்று சொல்லுங்கள். அவர் முகத்தில் திருப்தி ஏற்படும். மறுநாள் இன்னும் நன்றாக சமைக்க வேண்டும் என்று தோன்றும். குறைகளை மட்டும் கண்டுபிடித்து வாழ்ந்து வருவதால் தான் கஷ்டங்கள் அதிகமாக தெரிகிறது. நிறைகளையும் கண்டு பிடிக்க கற்றுக் கொண்டால் போதும் எல்லோரையும் நம்வசம் இழுத்து விடலாம். வேலை செய்யும் இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி, உறவுகளிடமும் சரி இன்று முதல் ஊக்கம் கொடுத்து பாருங்கள், எல்லாக் கஷ்டங்களும் மறைந்து போகும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 4 March 2013

பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது?



பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது என்பதைப்பற்றி பார்ப்போம். தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் பொறாமையாக வெளிப்படுகிறது. கீழ்கண்ட நான்கு விஷயத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வார்கள்.

1. அழகு

2. அறிவு

3. புகழ்

4. பணம்

இதைத் தவிர வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் உண்மை என்ன என்றால் யாருமே தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தான். கடவுளின் படைப்பு அனைத்தும் உயர்வானவை தான். ஆனால் அதை அறிந்து கொள்ளாமல் தன்னைத்தானே தாழ்த்தி அழிவை தேடிக்கொள்கிறார்கள். பொறாமை மனம் கொண்டவர்கள் மனம் எப்போதும் துன்பத்திலேயே இருக்கும். இதுவே ஒரு பெரிய கொடுமையான விஷயம் ஆகும்.

ஆனால் தன்னை தாழ்வாக எண்ணாமல் உயர்வாக நினைக்க ஆரம்பித்துவிட்டாலே போதும் பொறாமை என்ற அரக்க குணம் வெளியேறிவிடும் என்பது தான் உண்மை.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி