Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday, 24 April 2013

வெறுக்கத் தேவையில்லை ! ஒதுங்கி இருங்கள் !!



இன்றைய தினத்தில் நிறைய பேர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி கூற இருக்கிறேன்.

சில பேருக்கு நாம் எவ்வளவு தான் அன்பு செலுத்தினாலும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது என்னவென்றால், அந்த உறவைவிட்டு சற்று விலகி இருப்பதே நல்லது ஆகும். அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை மற்றும் வெறுக்கவும் தேவையில்லை. சற்று விலகியிருங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அன்பு தேவைப்படாமல் இருக்கும். வேறு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது. அது அவர்களுடைய பிராப்தம் ஆகும். எனவே எதிலும் சிக்கிக் கொள்ளாமல் மன அமைதியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதனால் யாரையும் வெறுக்கத் தேவையில்லை,  நம் மன அமைதியை கெடுக்க நினைப்பவர்களிடம் மட்டும் ஒதுங்கி இருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு "சூரியனை பார்த்து நாய் குரைத்தல் போல". அதாவது நல்லவர்களை பற்றி ஒருவர் எவ்வளவு தான் குறை கூறிக்கொண்டே இருந்தாலும், சூரியனை போல் நல்லவர்கள் பிரகாசித்துக் கொண்டு தான் இருப்பார்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 22 April 2013

அஷ்ட லஷ்மி குடியிருக்க வேண்டுமா ?






உழைப்பு தான் உயர்வு என்று கூறியிருந்தேன். ஆனால் சில பேர் எப்பொழுதுமே உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் தவறாகும். அதற்கு என்று தேவையான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உழைக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் சிறிது ஓய்வு எடுக்கவும் மற்றும் வீட்டில் எல்லோருக்காகவும் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பணம் சம்பாதிப்பதே வீட்டின் எல்லோருடைய சந்தோஷத்திற்காக தான்.

பணம் மட்டும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து அனுபவித்து மகிழ நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் சந்தோஷம் இருக்கும். அது மட்டும் அல்லாமல் உடம்புக்கு கட்டாயமாக ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் சம்பாதித்த பணத்தை கொண்டு மருத்துவமனையில் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் உடம்பு மற்றும் மனதை சரியாக இயக்க வேண்டும். பணத்தை சரியான முறையில் உபயோகித்து பயன்படுத்த வேண்டும்.

அப்படி சரியாக இயக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் துன்பத்துக்கே இடம் இல்லை. அது மட்டும் அல்லாமல் வீட்டில் அஷ்ட லஷ்மி குடியிருப்பாள் என்பதில் ஐயமில்லை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Saturday, 13 April 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:




அனைத்து வாசகர்களுக்கும் என் ஆத்மார்த்தமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை மெயில் மூலமாக தெரிவியுங்கள்.
என்னுடைய கருத்துக்கள் உங்கள் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் உடனே தெரிவியுங்கள். அதுதான் என் சந்தோஷம்.

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

நன்றி,
என்றென்றும் அன்புடன்,

ஈஸ்வரி


Wednesday, 10 April 2013

உழைப்பே உயர்வு !


நாம் வாழ்க்கையில் முன்னேற மற்றொரு வழி என்னவென்றால் உழைப்பு தான். உழைப்பே உயர்வு. நமது கடமையை சரியாக செய்ய வேண்டும். கடனுக்கு செய்யக் கூடாது. நம் தொழில் எதுவானாலும் அதை நேசித்து செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் "பணத்தை" வைத்து மனிதனை எடை போடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மதிப்பு வைத்துள்ளார்கள். எந்த தொழிலும் குறைந்தது அல்ல. செருப்பு தைப்பதும் ஒரு புனிதமான தொழிலே. அதுவும் ஒரு தொழில் தான். சில பேர் Business நல்லது என்று நினைப்பார்கள். சில பேர் Government Job தான் சிறந்தது என்று நினைப்பார்கள். ஆனால் எல்லா வேலைகளிலும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் போதும். நாம் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம். 

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பார்கள். ஆம், இந்த கரையிலிருந்து பார்பவருக்கு அந்த கரை அழகாக சூப்பராக தெரியும். இந்த தொழிலுக்கு அந்த தொழில் நல்ல தொழிலாக தெரியும். அந்த தொழிலில் இருப்பவருக்கு இந்த தொழில் சூப்பரான தொழிலாக தோன்றும். ஆனால் எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் உண்டு.

யாரும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பிட வேண்டாம். அனைவரையும் சமமாக எண்ணுங்கள்.  அதனால் எந்த தொழில் என்று மதிப்பு கொடுக்காமல் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் மதிப்பு அளியுங்கள். உழைக்காமல் உயர  வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக முன்னேற முடியாது. பொய் பேசுவது, ஏமாற்றுவது மற்றும் திருடுவது, இது போன்ற பழக்கவழக்கங்கள் தான் தவறாகும். ஆனால் எந்த தொழிலும் குறைந்தவை அல்ல. எல்லோர் உழைப்பும் உயர்ந்தவை ஆகும்.


நன்றி,


என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 7 April 2013

ஞாபகசக்தி எங்கே போய் விட்டது ?



தொடர்ந்து பேராதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.

பல பேர் என்னிடம் கேட்கும் சில சந்தேகங்களில் இதுவும் ஒன்று. ஞாபக சக்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது, அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்கள். ஞாபக சக்தி என்பது ஒரு மிகப் பெரிய விஷயம் கிடையாது. கடவுள் படைப்பில் மூளை மிக அற்புதமாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் தவறாக உபயோகப்படுத்துவதால் மந்தத் தன்மை ஏற்படுகிறது.

முதலில் உடல் ரீதியாக பார்ப்போம்:
---------------------------------
1.நிறைய போதை தரும் பொருட்களை (Drinks, பான்) சாப்பிடுவது

2.சிகரெட் குடிப்பது மற்றும் பாக்கு போடுவது.

3.இரத்த ஓட்டம் மூளைக்கு சரியாக செல்லவில்லை என்றால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது (This is rare case)

4.சத்து குறைவாக இருப்பது.


மன ரீதியாக பார்ப்போம்:
-----------------------

1.ஒரு விஷயத்தில் Involvement இல்லாமல் இருப்பது. (எந்த விஷயம் செய்கிறோமோ அதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது)

2.Presence of Mind இல்லாமல் இருப்பது. (சுயநினைவோடு இல்லாமல் கற்பனையிலேயே இருப்பது மற்றும் எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது)

இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஞாபக சக்தி இருப்பதில்லை. மற்ற படி மூளை அருமையாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஞாபக சக்தி இல்லாமல் இல்லை அது உங்களிடம் தான் இருக்கிறது.

உடல் ரீதியாக குறை இருக்கிறதா? அல்லது மன ரீதியாக குறை இருக்கிறதா? என்று யோசித்து சரி செய்யுங்கள்.

ஞாபக சக்தி பெருக்கெடுத்து ஓடும்.

நன்றி,

என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 3 April 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே !!




நாம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் ஏமாற்றங்கள் அடைந்துள்ளோம். ஏமாற்றம் அடைந்த பிறகு அடிபட்டு திருந்தியிருப்போம். யாரையும் ஏமாற்றவும் கூடாது- ஏமாறவும் கூடாது. அதிலும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதை கூட யோசித்து யாருக்கு செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று தெளிந்து செய்ய வேண்டும். அதாவது தேவை அறிந்து தானம் செய்ய வேண்டும். ரோட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு பைசா கூட போட கூடாது. கை, கால்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக பிச்சை எடுக்க வேண்டும். அதை ஊக்கம் மூட்டுவது போல் நாமே செய்து விடக்கூடாது.

உண்மையில் ஒருவர் முடியாத நிலையில் இருக்கும் போது, அவருக்கு உதவி செய்யலாம். தானத்தில் பலவகை உண்டு பணம், ஆடை, உணவு, இரத்தம் என்று பலவகை உண்டு. அதிலும் சிறந்தது கல்வி செல்வம். ஒருவர் படிக்க வசதியில்லாத நிலையில் இருப்பவருக்கு, நன்றாக படிக்கும் ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு, படிக்க உதவி செய்யலாம். கல்வியை தந்துவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்மை செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். அவருடைய தலைமுறைக்கே நன்மை கிடைக்கும்.

அதனால் தானம் செய்யும் முன்பு சிறிது யோசித்து செய்வது மிகவும் சிறந்தது. தானம் செய்யும் பேரில் ஏமாறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி