Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 3 April 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே !!




நாம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் ஏமாற்றங்கள் அடைந்துள்ளோம். ஏமாற்றம் அடைந்த பிறகு அடிபட்டு திருந்தியிருப்போம். யாரையும் ஏமாற்றவும் கூடாது- ஏமாறவும் கூடாது. அதிலும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதை கூட யோசித்து யாருக்கு செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று தெளிந்து செய்ய வேண்டும். அதாவது தேவை அறிந்து தானம் செய்ய வேண்டும். ரோட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு பைசா கூட போட கூடாது. கை, கால்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக பிச்சை எடுக்க வேண்டும். அதை ஊக்கம் மூட்டுவது போல் நாமே செய்து விடக்கூடாது.

உண்மையில் ஒருவர் முடியாத நிலையில் இருக்கும் போது, அவருக்கு உதவி செய்யலாம். தானத்தில் பலவகை உண்டு பணம், ஆடை, உணவு, இரத்தம் என்று பலவகை உண்டு. அதிலும் சிறந்தது கல்வி செல்வம். ஒருவர் படிக்க வசதியில்லாத நிலையில் இருப்பவருக்கு, நன்றாக படிக்கும் ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு, படிக்க உதவி செய்யலாம். கல்வியை தந்துவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்மை செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். அவருடைய தலைமுறைக்கே நன்மை கிடைக்கும்.

அதனால் தானம் செய்யும் முன்பு சிறிது யோசித்து செய்வது மிகவும் சிறந்தது. தானம் செய்யும் பேரில் ஏமாறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

4 comments:

  1. தானம் செய்வதற்கு வரைமுறை கிடையாது.நம்மிடம் தானம் கேட்டு அதைக் கொடுக்கும் இடத்தில் நம்மை வைத்திருப்பதே இறைவனின் அருள்.ஆதலால் முகம் பார்த்து தானம் செய்வது மிகப்பெரிய பாவம்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  2. ஆம் நீங்கள் சொல்வது சரி. கொடுக்கும் நிலையில் இருக்கும் நாம் நிலையறிந்து கொடுக்க வேண்டும் என்று தான் கூறியிருக்கிறேன். முகம் பார்த்து கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. எந்த தானம் வேண்டும் ஆனாலும் செய்யலாம் தவறில்லை. அதிலும் சிறந்தது கல்வியை கொடுப்பது தான் என்று கூறியிருக்கிறேன். இன்னொரு முறை நன்றாக மீண்டும் படியுங்கள்.

    ReplyDelete
  3. தாங்கள் சொல்லி இருக்கும் எதையும் மறுக்கவோ அதை குறையோ சொல்லவில்லை.
    பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்னுமிடத்தில்தான் ஒரு சிறு ஆலோசனைதான் சொன்னேன்.
    ஒருவனுக்கு மீனைத் தருவதை விட மீன் பிடிக்கச் சொல்லித் தருவதுதான் சிறந்த தானம்.
    அதனால் கிடைக்கும் புண்ணியம் மிகவும் பெரியது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  4. உங்கள் கருத்திற்க்கு நன்றி.

    ReplyDelete