Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Thursday 15 November 2012

பக்தி என்றால் என்ன ? - பகுதி -2



நேற்றைய பதிவின் தொடர்ச்சி ..

அப்ப இதெல்லாம் பக்தி கிடையாதா ? என்று கேட்டால். இல்லை என்று கூற மாட்டேன். அது வழிபாடு மட்டுமே. ஆனால் உண்மை என்பது கடவுள் மிகவும் பிரமாண்டமானவர். அவரிடம் உண்மையான அன்பு காட்டினால் போதும் எல்லாம் கிடைத்துவிடும். பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

1. நம்பிக்கை
2.அன்பு
3.உண்மை
4.ஒழுக்கம்
5.உதவி
6.கடமை
7.சிரிப்பு
8.அமைதி

இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் . கடவுள் உங்கள் பக்கம் தான். கடவுளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து விட்டு, இவர் இதை செய்வாரா? செய்ய மாட்டாரா ? என்ற எதிர்பார்ப்பு உடன் இருந்தால் எப்படி கிடைக்கும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது நம்மால் முடிந்ததை உதவி செய்தால் போதும் அதில் கடவுள் இருக்கிறார். அன்பு, இரக்கம் இருந்தாலே போதும் உண்மையும், ஒழுக்கமும் தானாகவே வந்துவிடும். ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் நாம் கடவுளை வழிபடுகிறோம். அது தவறு அல்ல ஆனால் அதுவே பழக்கமாக இருந்தால் அதற்கு பெயர் பக்தி அல்ல. எப்பொழுதும் சிரித்து முகமலர்ச்சியுடன் இருக்கும் போது முகமும் வசீகரமாக இருக்கும், எல்லோருக்கும் உங்களை பிடிக்கும், எந்த நோயும் வரவே வராது.

நம் பொரியோர்கள் கூறிய படி நாம் செய்யும் ஒவ்வொன்றிக்கும் ஒரு காரணம் உண்டு.

உதாரணத்திற்க்கு,

1. தீபம் ஏற்றுவதால் வீட்டுக்கு வெளிச்சம் கிடைக்கும் மற்றும் அந்த ஒளியை பார்த்து வந்தால் மனம் ஒருநிலைப்படும் என்பதற்க்காகத்தான் தீபம் ஏற்றுகிறோம்.

2. கற்பூரம் காட்டுவது என்பது கற்பூரம் எரிந்து ஒன்றும் இல்லாமல் போவது போல, நாமும் கடவுளை நினைத்து இந்த கற்பூரம் போல் இறைவனுடன் இரண்டர கலந்து இந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது தான்.

3.மலர்கள் போடுவது கூட, நாமும் மலர்கள் போல மணம் வீசி பரந்து விரிந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்பது தான்.

"கடவுளிடம் நமக்கு வேண்டியதை எல்லாம் கேளுங்கள். அவரிடம் கேட்காமல் நாம் வேறு யாரிடம் கேட்க முடியும். ஆனால் கேட்பதற்க்காக மட்டுமே கடவுளை வணங்காதீர்கள்".

இன்னும் எழுதலாம் வாசகர்களின் பொறுமை கருதி இத்துடன் இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் வரும்.

அடுத்த பகுதியில் மீண்டும் அக்குபஞ்சர் பற்றி பார்ப்போம்


நன்றி


அன்புடன்
ஈஸ்வரி

No comments:

Post a Comment