Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Wednesday 14 November 2012

பக்தி என்றால் என்ன ?



அக்குபஞ்சருக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம்? உடம்புக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம் என்று பார்கிறீர்களா ?

அக்குபஞ்சரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் போர் அடிக்காமல் இருக்க ஒரு மாறுதலுக்காக வேறு சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி வரும் பகுதியில் மதம் பற்றி பேச வில்லை மனித மனம் பற்றி பேச இருக்கிறேன்.

பக்தி என்றால் என்ன என்பதை பற்றி கூற இருக்கிறேன்.  கடவுள் என்பவர் யார்? சிவனா, விஷ்னுவா, பார்வதியா அல்லது லஷ்மியா, இயேசுவா அல்லது அல்லாவா ?  இதில் யார் கடவுள் ?

அவரவர் மனநிலைக்கு ஏற்ப பிடித்த கடவுளை வழிபாடு செய்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் கடவுள் என்பவர் குறுகிய ஒரு வட்டத்திற்குள் இருக்கக் கூடியவர் இல்லை. மிகவும் பிரம்மாண்டமான பரந்து விரிந்து இருக்கக் கூடியவர். அது தான் பிரபஞ்சம்.

நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் இந்த ஐந்தின் வெளிப்பாடு தான் பிரபஞ்சம். அது நமக்குள் அடங்கி இருக்கும் வரை தான் நாம் "மனிதன்" என்று அழைக்கப்படுகிறோம். காற்று நின்று விட்டால் அதற்கு என்ன பெயர் "பிணம்" என்று கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சமாகிய ஐந்தையும் நாம் கவனித்துக் கொண்டாலே போதும் உடம்பும் நன்றாக இருக்கும், பக்தியும் தானாகவே வந்து விடும்.

உடம்புக்கும் பக்திக்கும் என்ன சம்பந்தம் என்று பார்கிறீர்களா ?   இருக்கிறது.

எவன் ஒருவன் உடம்பையும், மனதையும் நன்றாக வைத்திருக்கிறானோ அவர்களைத்தான் இந்த பிரபஞ்சத்துக்கு பிடிக்கும். நீங்கள் நினைத்தது எல்லாம் கிடைக்கும். உடம்பு சரியாக இருந்தாலே மனமும் நன்றாக இருக்கும். கடவுளுக்கு நாம் என்ன செய்கிறோம். சூடம் காட்டுவது, நெய் வேத்தியம் செய்வது, பாதயாத்திரை செல்வது, கோயிலுக்கு சென்று வருவது, பரிகாரங்கள் செய்வது, நேர்த்திக்கடன் செலுத்துவது, இது போன்ற விஷயங்களை தான் நாம் கடவுளுக்கு செய்கிறோம். இதை எல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சரி இதையெல்லாம் செய்கிறோம். ஆனாலும் சில நேரங்களில் மனக் குழப்பம் மற்றும் கவலையில் தானே இருக்கிறோம். சிலர் மேலே கூறிய எதையும் செய்ய மாட்டார்காள். ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கிறது.

இது எப்படி சிறிது யோசியுங்கள் ?

கடவுளுக்கு இதையெல்லாம் செய்ய வேண்டுமா ? செய்ய கூடாதா ? எதை செய்தால் நமக்கு எல்லாம் கிடைக்கும் ?
 
                                                                                                                    தொடரும்  .. .. .. .. ... ....

No comments:

Post a Comment