Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Tuesday 27 November 2012

கருவிழி பற்றி ஓர் ஆய்வு:



கண்ணின் கருவிழியை பகுப்பாய்வு செய்வதே இரிடோலஜி (Iridiology) ஆகும். கண்ணின் கருவிழியில் தோன்றக்கூடிய நிறம், குறியீடுகள் அமைப்பு மற்றும் இவற்றில் தோன்றும் மாறுபாடுகளைக் கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பல மதிப்புமிக்க தகவல்களை அறிந்து கொள்ளலாம், அதாவது நோயை பற்றி அறியலாம்.

கண்ணின் கருவிழியில் இருந்து நாம் தகவல்களை விரைவாகவும், வலி இல்லாமலும் செலவின்றியும் எளிதாக பெறமுடியும். சிறிய பூத கண்ணாடியை கொண்டு கண்டறியலாம். ஐரிஸ் (Iris) என்று அழைக்கப்படும் கருவிழியானது கண்ணிற்கு தனித்தன்மையுள்ள நிறத்தை அளிக்கிறது.

கண்ணின் கருவிழியை கொண்டு தீவிர நிலை (acute), நாள்பட்ட நிலை (chronic), மீளா நிலை (Degenerative) இந்த மூன்று நிலையில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

தீவிர நிலை (acute)          - நோயின் தொடக்க நிலை
நாள்பட்ட நிலை (chronic) - நாள்பட்ட நோய்
மீளா நிலை (Degenerative) - நோய் முற்றிய நிலை

எந்த ஒரு செலவும் இல்லாமல உடனே அறிந்து கொள்ள கண்ணின் கருவிழி மிகவும் உபயகரமாக உள்ளது. கருவிழியைப் பார்த்து உடலில் எந்த உறுப்பில் பிரச்சனையாக இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்டு இந்த நோய் தான் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கூற முடியாது.

உதாரணத்திற்கு கருப்பையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கருப்பையில் கட்டி இருக்கிறதா? பெரியதாக இருக்கிறதா? அல்லது சிறியதாக இருக்கிறதா? அல்லது வேறு எதாவது பிரச்சனை இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியாது. இது தான் என்பதை உறுதியாக கூறமுடியாது.

ஆனால் கருப்பையில் தான் பிரச்சனை என்பதனை நன்றாக அறிந்து கொள்ள முடியும். இது போல் உறுப்புகளின் பிரச்சனைகளை கண்ணின் கருவிழியில் தெரிந்து கொள்ள முடியும்.

Scan,  X-Ray மற்றும் Laproscopy இது போன்ற Test எல்லாம் எடுக்கத்தேவையில்லை. கருவிழியை வைத்து எந்த உறுப்பில் பிரச்சனை என்று தெரிந்து கொண்டு அதனுடைய சக்தி ஓட்டப்பாதையில் அக்குபக்ஞசர் முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய்களை சரி செய்ய முடியும்.

கண்ணின் வெள்ளை விழியை பார்த்து குறிப்பிடும் வைத்தியம் அல்ல. இது முழுக்க முழுக்க கண்ணின் கருவிழியை மட்டுமே பார்த்து ஆராய்வதாகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment