நீர் (water) மூலகம் குறைந்தால் என்ன விளைவு ஏற்படும் என்று எழுதியிருந்தேன். (படிக்காதவர்கள் பகுதி-1 பதிவை படித்துவிட்டுவரவும்)
அது போல் நிலம் (Earth) மூலகம் சரியாக செயல்படவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று எழுதுகிறேன். நிலம்
(Earth) என்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகும். வயிறு மற்றும் மண்ணீரல் பிரச்சனைகள் ஏற்படும். நான் முன்பே கூறியது போல் வாயை நன்றாக மூடி மென்று சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சேர்ந்து உள்ளே போகும். அவ்வாறு போகும் போது வயிறு ஜீரணம் செய்ய மிகவும் பேருதவியாக இருக்கும். நன்றாக ஜீரணம் செய்யப்பட்டால் தான் அது சிறுகுடலுக்கு அனுப்பப்பட்டு அன்று உணவு பொருட்கள் சக்தியாக மாற்றப்பட்டு நல்ல இரத்தமாக மாறி உடலுக்கு செல்லும். வயிறு சரியாக ஜீரணம் ஆகும் போது மலச்சிக்கல் ஏற்படாது. உடம்பே மிகவும் லேசாக இருக்கும். உணவு சரியான சக்தியாக மாற்றப்படவில்லை என்றால் உடம்புக்கு சக்தி கிடைக்காது. நிலம் (Earth) மூலகம் சக்தி ஓட்டப்பாதையில் தடை ஏற்படும். பின்பு என்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் தெரியுமா ?
1. அஜீரண கோளாறு
2. இரத்த சோகை
3. புளித்த ஏப்பம்
4. மாதவிடாய் கோளாறு
5. கர்ப்பப்பை பிரசனைகள்
6. வயிறு உப்புசம்
7. உடல் சோர்வு
8. தூக்கமின்மை
9. பசியின்மை
10.மலச்சிக்கல்
11.வாயு தொந்தரவு
இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே நன்றாக சாப்பிடும் முறையை கடைபிடித்தால் எந்த பிரச்சனையும் வராது.
அதே போல் நாம் பசித்து சாப்பிடவேண்டும். நேரம் பார்த்து நம் வசதிக்கு ஏற்ப சாப்பிடுவது மிகவும் தவறாகும். "பசித்து ருசி" என்று கூறுவார்கள். அது மட்டும் அல்லாமல் சாப்பிடுவதற்க்கு முன்பு இனிப்பை சாப்பிட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தால் வயிறு ஜீரணம் நன்றாக நடைபெறும். எப்படி என்றால், நமக்கு பசிக்கும் போது வயிற்றில் Hydro Chloric Acid சுரந்து இருக்கும். சிலருக்கு சுரக்கவே சுரக்காது அப்போது இனிப்பை சாப்பிட்டுவிட்டால், அந்த அமிலம் சுரந்து விடும். பின்பு எந்த உணவை சாப்பிட்டாலும் ஜீரணம் சரியாக நடைபெறும். சாப்பிட்ட பின்பு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது தண்ணீர் குடிக்க கூடாது. அரைமணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
முதலில் தண்ணீர் குடித்தாலோ அல்லது இடையில் தண்ணீர் குடித்தாலோ Hydro Chloric Acid வேலை செய்யாது. பின்பு உணவு சாப்பிடும் போது ஜீரணம் சரியாக நடைபெறுவதில்லை. அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்றால் நாம் உணட உணவு ஜீரணம் நடைபெற்று சிறுகுடலுக்கு அனுப்பிவிடும். பின்பு குடித்தால் ஒன்றும் செய்யாது. எனவே உணவு அருந்தும் முறையை நன்றாக கடைபிடிக்க ஆரம்பித்தால் போதும் வயிறு ஜீரணம் நன்றாக நடைபெறும்.
மலச்சிக்கல் ஏற்படும் போது வயிற்று வலி ஏற்படும். பின்பு முதுகு வலி ஏற்படும். வயிற்றில் கழிவுகள் வெளியேற்றப்படவில்லை என்றால், கிருமிகள் உருவாகிவிடும். கிருமிகள் வயிற்றில் இருக்கும் போது பசி இருக்காது, தோலில் நிறமாற்றம் ஏற்படும் மற்றும் அரிப்பு ஏற்படும். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் வயிற்றில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறிவிட வெண்டும்.
அதனால் தான் அந்த காலத்தில் முதலில் இலையில் இனிப்பு வைத்து ஆரம்பிப்பார்கள். இனிப்பில் ஆரம்பித்து சாப்பிட்டால் நமது வாழ்கையும் இனிப்பாக இருக்கும் என்பது தான் தத்துவமாக கூறப்படுகிறது.
இன்னும் வரும் .....
No comments:
Post a Comment