Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Friday 16 November 2012

திருவண்ணாமலை கிரிவலம் செல்லுங்கள்:






ஈஸ்வரனின் நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலையில் நடைபெறும்  கிரிவல சிறப்பு பற்றி சொல்வதற்க்கு முன், நெருப்பு மூலகம் பற்றி பார்ப்போம்.

நெருப்பு மூலகம் என்பது அக்குபஞ்சரில் நான்கு உறுப்புகளைக் கொண்டது.

1. உதரவிதானம்  - Tripple Warmer
2. இருதய உறை -  Pericardium
3. இருதயம்         -  Heart
4. சிறுகுடல்         - Small Intestine

இந்த நான்கும் தான் நெருப்பு சக்திக்கு உரியதாகும். இந்த நான்கில் ஏதேனும் குறைபாடு ஏற்படுமானால் "நாக்கில்" தெரிந்து விடும். அதாவது  வெளிப்புற உறுப்பு நாக்கு ஆகும். உடலின் வெப்ப சக்தி சரியாக இயங்க வேணடும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் நாக்கில் தெரிந்துவிடும். இந்த உறுப்பிற்கான சுவை "கசப்பு" ஆகும்.

நாம் சாப்பிடும் உணவு வாய்வழியாக சென்று பிறகு தொண்டையை அடைந்து பிறகு உணவுக்குழாய் வழியாக சென்று இரைப்பையை அடைகிறது. பின்பு அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. சிறுகுடலில் என்ன வேலை நடக்கிறது என்று பார்க்கலாமா?. பொதுவாக செரிமான வேலைகள் இரைப்பையில் தொடங்கினாலும் இது சிறுகுடல் பகுதியில் தான் முழுமை பெறுகிறது. உணவிலிருந்து மனித வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன.

கீழே குறிப்பிட்டுள்ள இம்மூன்றும் இரைப்பையையும், பெருங்குடலையும் இணைக்கிறது.

1. அசையா பகுதி  - Duodenum
2. அசையும் பகுதி - Jejunam
3. இலியம் - Iieum

குடலில் உட்சுவற்றில் மெல்லிய கைவிரல்கள் போன்ற குடலுறிஞ்சிகள் (Villi) அமைந்துள்ளன. இவை தான் உணவிலுள்ள சத்துக்களை உட்கிரகிக்கின்றன. இது தான் உணவின் செரிமானத்தை முழுமையாக்கும். பிறகு பெருங்குடல் சென்று மீதமுள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும். பின்பு (Caecum) சீக்கம், ஏறுகுடல் (Ascending colon) , குறுக்குக் குடல் (Transverse colon) , இறங்கு குடல் (Decending colon), சிக்மாய்ட் (sigmoid), மலக்குடல் (Rectum),  மலவாய் (Anus) என உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு நாம் உண்ட உணவு இவ்வளவு வேலை நடக்கிறது. இவ்வளவு வேலைக்கு பின்பு நமக்கு இரத்த உற்பத்தி ஆகிறது.

இந்த இரத்தம் எவ்வாறு இருதயம் மூலம் வேலை செய்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். இந்த இரத்தம் தான் உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது.

இரத்த ஓட்டம்:

நம் உடலில் இரத்த சுற்று ஓட்டங்கள் பல உள்ளன. எல்லா உறுப்புகளிலிருந்தும் அசுத்த இரத்தம் (கார்பன் - டை -ஆக்ஸைடு கலந்த இரத்தம்) இதயத்தில் வலது எட்ரியத்திற்கு வந்து, வலது வெண்டிரிக்களுக்கு மூவிதழ் வால்வு (Tricuspid valve) வழியாக செல்கிறது. அசுத்த இரத்தம் (கார்பன் - டை -ஆக்ஸைடு கலந்த இரத்தம்) வலது வெண்டிரிக்கலிருந்து நுரையீரலுக்கு சென்று நுரையீரல் தமனி மூலம் சென்று அங்கு கார்பன் - டை -ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. இதனால் அசுத்த இரத்தம் சுத்த இரத்தமாகிறது. பின்னர் நுரையீரலிருந்து நுரையீரலின் சிரை மூலம் சுத்த இரத்தம் இடது எட்ரியத்திற்கு வருகிறது. இங்கிருந்து சுத்த இரத்தம் இடது வெண்டிரிக்களுக்கு பம்ப் செய்து அனுப்பப்படுகிறது. இடது வெண்டிரிக்களிலிருந்து சுத்த இரத்தம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.

சரியாக உணவு செரிமானம் நடந்து நல்ல இரத்தம் கிடைத்தால் தான் மேற்கண்ட இந்த வேலைகள் எல்லாம் நடக்கும். உடம்பு சுறுசுறுப்பாக இயங்கும். இருதய  உறை இருதயத்திற்க்கு மேலே பாதுகாப்பு உறையாக அமைந்துள்ளது. அதான் சொல்லுவார்கள் "இரத்தம் இருக்கும் வரை இவர் பேசுவான்" என்று கூறுவார்கள். இரத்தம் இல்லை என்றால் உடல் உக்ஷ்ணம் குறைந்து விடும். உதாரணத்திற்க்கு இரத்த சோகை உள்ளவர்களை பார்த்தால், உடல் சோர்வு, பசியின்மை, வயிறு உப்புசம், நடந்தால் மூச்சு வாங்குதல், தூக்கமின்மை, முகத்தில் நிறமாற்றம் போன்ற பல அறிகுறிகளை உண்டாக்கலாம். காய்ச்சல் வந்து விட்டால் உடல் உக்ஷ்ணம் அதிகம் ஆகும் போது இரத்தம் ஓட்டத்தடை ஏற்படும். கால்களுக்கு சரியாக இரத்தம் செல்லாது. அப்போது கால்களை தொட்டுப்பார்த்தால் "ஜில்" என்று இருக்கும். எந்த இடத்தில் எல்லாம் இரத்தம் சரியாக செல்லவில்லையோ அந்த இடத்தில் எல்லாம் "ஜில்" என்று இருக்கும். எனவே இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே குறிப்பிட்டது போல என்ன நோய்கள் ஏற்படும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1. இருதய வலி
2. பசியின்மை
3. ஒற்றை தலைவலி
4. தூக்கமின்மை
5. அஜீரணம்
6. காய்ச்சல்
7. மலச்சிக்கல்
8. ஞாபக மறதி

என்வே இந்த இரத்த ஓட்டம் நன்றாக இயங்க வேண்டும் ஆனால் உழைக்க வேணடும். உடம்புக்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் உணவு உண்ணும் முறை இதை கடைபிடித்தால் நெருப்பு மூலகத்தை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.

வீட்டில் இருக்கும் வேலைகளை செய்தாலே போதும். ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு T.V பார்த்து பொழுது கழிப்பது, Two Wheeler or Car -ல் Shopping போவது. இதை மட்டுமே சில பேர் செய்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பின்னாடி உடம்புக்கு எல்லா நோய்களும் வந்துவிடும். இதை குறை சொல்வதற்க்காக சொல்லவில்லை. இனி மேல் இந்த தவறை செய்யாமல் திரித்திக் கொள்ளுங்கள். இதற்கு இன்னொரு வழி சொல்கிறேன்.

இரத்த ஓட்டம் குறையும் போது தூக்கமின்மை பிரச்சனை வரும்.  தூக்கமின்மை பிரச்சனை வரும் போது மன எண்ண ஓட்டங்கள் அதிகம் வரும். அதனால் மனப்பிரச்சனை வரும். இதற்கு ஒரு நல்ல விஷயம் சொல்கிறேன். "திருவண்ணாமலை" சென்று கிரிவலம் சென்று வந்தால் பல நோய்கள் சரியாகிவிடும். எப்படியென்றால் நடக்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யும். சுரக்காத சுரப்பிகளும் சுரந்துவிடும். அதனால் உடம்புக்கு தேவையான உஷ்ணம் கிடைத்துவிடும். அதனால் இரவு படுத்ததும் தூக்கம் வந்து விடும். எண்ணங்களும் குறைந்துவிடும். அதனால் தான் "கிரிவலம்" என்று ஒன்று நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் மனம் அமைதிக்கு திருவண்ணாமலை செல்கிறார்கள். திருவண்ணாமலையாரும் "நெருப்புக்கு" உரியவர் ஆகும். எனவே நடைபயிற்சி மற்றும் உணவு முறை சரி செய்து எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் ஆகும்.

பதிவு நீளமாக இருந்தாலும், இடையில் பிரித்து இரண்டு பகுதியாக போட்டால், படிக்கும் போது சுவாரசியம் குறையும் என்ற காரணத்தினால் ஓரே பதிவாக வெளியிடுகிறேன்.

உங்களின் மேலான விமர்சனங்களை எனக்கு தெரியப்படுத்தவும். உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் பின்னூட்டம் இடவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

No comments:

Post a Comment