Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Saturday 24 November 2012

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:



நடைப்பயிற்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதைபற்றி என்ன கூற போகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆம். அதில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன. பொதுவாக உடம்பில் தேவையில்லாத கொழுப்பு அதிகம் ஆகும் போது மருத்துவர் கூறுவது சிறிது நடைபயிற்சி செய்யுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள். மற்றும் சில நோய்களுக்கும் சேர்த்து நடக்க சொல்வார்கள். எதற்கெல்லாம் சொல்வார்கள் என்றால் மிகை அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் போன்ற பலவற்றிக்காக நடக்க சொல்வார்கள். ஏன் சொல்கிறார்கள்? எப்படி சரியாகிறது? சிலருக்கு சரியாகுவது இல்லை? ஏன்? . இதைபற்றி பார்க்கலாம்.

பிரதிபலிப்பு முறை (Reflexology) என்பது ஒரு "மாற்று மருத்துவ முறையாக" அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  பிரதிபலிப்பு முறை என்பது கைகளிலும், கால்களிலும் உள்ள உடல் உறுப்புகளை பிரதிபலிப்பு பகுதிகளை கட்டை விரல்களால் அழுத்தி நீவி விட்டு சிகிச்சை அளிக்கும் முறையாகும். பிரதிபலிப்பு முறை நோய்களை தீர்ப்பது மட்டும் அல்லாமல் "வருமுன் காக்கும்" தடுப்பு முறையாகவும் பயன்பட்டு வருகிறது.

நம் உடலில் உள்ள பல உறுப்புகளின் தொகுப்பு "மண்டலம்" எனறு அழைக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் உள்ளடங்கும் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்கின்றன. நரம்பு  மண்டலத்தில் உள்ள அனைத்தும் கால் பாதத்தில் சென்றடைகின்றன. நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் கால் பாதத்திற்க்கும் தொடர்பு உடையவை. எனவே தான் நாம் நடக்கும் போது பல நோய்கள் சரியாகின்றன,

நடக்கும் போது நாம் போசாமல் நடக்க வேண்டும். பின்பு கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும் என்று எல்லாம் செய்கிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் செய்யாமல் விட்டுவிடுவதால் தான் சிலருக்கு Result இல்லாமல் போய்விடுகிறது.

இனிதான் ஒரு ரகசியத்தை சொல்ல போகிறேன். நடக்கும் போது காலில் செருப்பு மற்றும் Shoe இல்லாமல் நடக்க வேண்டும். அதாவது வெறும் காலுடன் நடக்க வேண்டும் அப்பொழுது தான் கால் பாதம் தரையில் பட்டு நமக்கே தெரியாமல் pressure செய்யபட்டு உறுப்புகள் Activate ஆகிவிடும். இப்படி செய்தால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். உடனே சந்தேகம் வரும் அப்பொழுது காலில் கல், மண் பட்டு கால் சேதம் ஆகிவிடுமே? என்று கேட்பீர்கள். அதாவது Park போன்ற இடங்களுக்கு சென்று நடந்தால், அந்த நடைபாதையில் (speicfied place for walk) நடக்கும் போது மட்டும் காலணிகளை அகற்றி நடக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வீட்டின் முன்னாடி இடம் இருந்தால் சிமென்ட் தரையில் நடக்கலாம். ஆனால் பாதயாத்திரை செல்லபவர்கள் காலில் எதுவும் போடாமல் தான் நடப்பார்கள். அவர்கள் பாதயாத்திரை முடித்து வந்தவுடன் நல்ல பலன்கள் இருக்கும். உடம்பு மற்றும் மனம் இரண்டுமே நன்றாக இயங்க துவங்கிவிடும்.

நடைப்பயிற்சியினால் என்ன நோய்கள் சரியாகின்றன என்பதைப்பற்றி பார்க்கலாம்.

1. தோள்பட்டை
2. காது
3. கண்
4. தைராய்டு
5. சைனஸ்
6. நுரையீரல்
7. வயிறு
8. கல்லீரல்
9. பித்தப்பை
10.கணையம்
11.குடல் நோய்
12.சிறுநீரகம்
13.அட்ரினல் சுரப்பி
14.இடுப்பு தசைகள்
15.இடுப்பு தொடை நரம்பு
16.முழங்கால்
17.இடுப்பு வலி
18.அண்டகம்
19.விந்தகம்
20.கருப்பை
21.விதைப்பை
22.தோல் மண்டலம்
23.நிணநீர்
23.கருப்பை குழாய்

இவை அனைத்தும் நடைப்பயிற்சி செய்தால் சரியாகின்றன என்பது மிகமிக உண்மையான விஷயம் ஆகும். எதற்க்காக அணைத்து நோயும் சொல்லியிருக்கிறேன் என்றால் இதன் முக்கியத்துவம் தெரிந்தால் தான் எல்லோரும் நடைபயிற்சி செய்வீர்கள் என்று தான் கூறிகின்றேன். எனவே நடைபயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்து எல்லோரும் தினமும் அரைமணி நேரமாவது நடக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.

ஒரு உதாரணத்திறக்கு காலில் மூட்டுவலி மற்றும் தசைவலி என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் என்ன செய்வோம் தைலம் எடுத்துக் கொண்டு அந்த குறிப்பிட்ட இடத்தில் மசாஜ் செய்து விடுவோம். அது சரியாகிவிடும். தோலில் உள்ள சிறுசிறு துழைகள் வழியாக தைலம் செல்லும் மற்றும் நாம் செய்யும் மசாஜ்ஜும் சேர்ந்து வேலை செய்யும். எனவே நோய்கள் சரியாகினறன்.

பெரிய பெரிய spa, malls, massage centre -களில் மசாஜ் செய்து கொள்வதால் உடம்பு சுறுசுறுப்பு மற்றும் வலி நிவாரணம் கிடைக்கின்றன. ஆனால் எல்லாராலும் அதிக பணம் கொடுத்து மசாஜ் செய்து கொள்ள இயலாது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொண்டால். செலவும் கிடையாது- பலனும் உண்டு.

டிப்ஸ்:

நடக்க முடியாதவர்கள், கால்களை நாமே கைகளால் பாதத்தில் அழுத்தம் கொடுத்தால் போதும் நோய்கள் சரியாகும்.

2 comments:

  1. puthiya ariya thagavalgal
    thks for sharing

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டிற்க்கு நன்றி. இன்னும் பல அரிய தகவல்கள் வர இருக்கின்றன. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete