Pages

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM

SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM
Mrs.Easwari Saravana., M.D (Acu) , SRI MALAIYANDI AMMAN ACCUPUNCTURE ILLAM, 19/9, Rajeswari Street, Kamarajar Nagar, 3rd Street, Choolaimedu, Chennai -600094 Contact No.9566205743, Get Appoinment in advance

Monday, 25 November 2013

எனது அக்குபஞ்சர் இல்லம்:


அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

கீழ்கண்ட விலாசத்தில் எனது அக்குபஞ்சர் இல்லம் தற்சமயம் இயங்கி கொண்டு உள்ளது

Mrs.Easwari Saravana., M.D (Acu) ,
Healer,
SRI MALAIYANDI AMMAN ACUPUNCTURE ILLAM,
19/9, Rajeshwari Street,
Kamarajar Nagar, 3rd Street,
Choolaimedu, Chennai -600094

Contact No.9566205743,
Get Appointment in Advance


Diseases cured
·                     Diabetes
·                     Blood Pressure
·                     Heart Diseases
·                     Kidney Stones
·                     Back pain
·                     Knee Pain
·                     Fever
·                     Skin Diseases
·                     Uterus Problem
அக்குபஞ்ச்ர், சுஜோக், ஸீட் தெரபி, மேக்னட் தெரபி மற்றும் ஹீலிங் மூலம் அனைத்து விதமான நோய்களும் சரி செய்யப்படும்.

சர்க்கரை நோய் மருந்து, மாத்திரை இல்லாமல் சரி செய்யப்படுகிறது.

முதுகு தண்டு பிரச்சனையால் வலியால் துடிப்பவர்கள் உடனே அனுகவும், நல்லமுறையில் சரிசெய்யப்படுகிறது.

நாள் பட்ட நரம்புச்சுருள் நோய் சரிசெய்ய்ப்படும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 24 April 2013

வெறுக்கத் தேவையில்லை ! ஒதுங்கி இருங்கள் !!



இன்றைய தினத்தில் நிறைய பேர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி கூற இருக்கிறேன்.

சில பேருக்கு நாம் எவ்வளவு தான் அன்பு செலுத்தினாலும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது என்னவென்றால், அந்த உறவைவிட்டு சற்று விலகி இருப்பதே நல்லது ஆகும். அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை மற்றும் வெறுக்கவும் தேவையில்லை. சற்று விலகியிருங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அன்பு தேவைப்படாமல் இருக்கும். வேறு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்களை சந்தோஷப்படுத்த முடியாது. அது அவர்களுடைய பிராப்தம் ஆகும். எனவே எதிலும் சிக்கிக் கொள்ளாமல் மன அமைதியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதனால் யாரையும் வெறுக்கத் தேவையில்லை,  நம் மன அமைதியை கெடுக்க நினைப்பவர்களிடம் மட்டும் ஒதுங்கி இருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு "சூரியனை பார்த்து நாய் குரைத்தல் போல". அதாவது நல்லவர்களை பற்றி ஒருவர் எவ்வளவு தான் குறை கூறிக்கொண்டே இருந்தாலும், சூரியனை போல் நல்லவர்கள் பிரகாசித்துக் கொண்டு தான் இருப்பார்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 22 April 2013

அஷ்ட லஷ்மி குடியிருக்க வேண்டுமா ?






உழைப்பு தான் உயர்வு என்று கூறியிருந்தேன். ஆனால் சில பேர் எப்பொழுதுமே உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் தவறாகும். அதற்கு என்று தேவையான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு உழைக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் சிறிது ஓய்வு எடுக்கவும் மற்றும் வீட்டில் எல்லோருக்காகவும் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பணம் சம்பாதிப்பதே வீட்டின் எல்லோருடைய சந்தோஷத்திற்காக தான்.

பணம் மட்டும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து அனுபவித்து மகிழ நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் சந்தோஷம் இருக்கும். அது மட்டும் அல்லாமல் உடம்புக்கு கட்டாயமாக ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் சம்பாதித்த பணத்தை கொண்டு மருத்துவமனையில் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் உடம்பு மற்றும் மனதை சரியாக இயக்க வேண்டும். பணத்தை சரியான முறையில் உபயோகித்து பயன்படுத்த வேண்டும்.

அப்படி சரியாக இயக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் துன்பத்துக்கே இடம் இல்லை. அது மட்டும் அல்லாமல் வீட்டில் அஷ்ட லஷ்மி குடியிருப்பாள் என்பதில் ஐயமில்லை.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Saturday, 13 April 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:




அனைத்து வாசகர்களுக்கும் என் ஆத்மார்த்தமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை மெயில் மூலமாக தெரிவியுங்கள்.
என்னுடைய கருத்துக்கள் உங்கள் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் உடனே தெரிவியுங்கள். அதுதான் என் சந்தோஷம்.

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

நன்றி,
என்றென்றும் அன்புடன்,

ஈஸ்வரி


Wednesday, 10 April 2013

உழைப்பே உயர்வு !


நாம் வாழ்க்கையில் முன்னேற மற்றொரு வழி என்னவென்றால் உழைப்பு தான். உழைப்பே உயர்வு. நமது கடமையை சரியாக செய்ய வேண்டும். கடனுக்கு செய்யக் கூடாது. நம் தொழில் எதுவானாலும் அதை நேசித்து செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் "பணத்தை" வைத்து மனிதனை எடை போடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மதிப்பு வைத்துள்ளார்கள். எந்த தொழிலும் குறைந்தது அல்ல. செருப்பு தைப்பதும் ஒரு புனிதமான தொழிலே. அதுவும் ஒரு தொழில் தான். சில பேர் Business நல்லது என்று நினைப்பார்கள். சில பேர் Government Job தான் சிறந்தது என்று நினைப்பார்கள். ஆனால் எல்லா வேலைகளிலும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் போதும். நாம் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து உழைத்தால் வெற்றி நிச்சயம். 

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பார்கள். ஆம், இந்த கரையிலிருந்து பார்பவருக்கு அந்த கரை அழகாக சூப்பராக தெரியும். இந்த தொழிலுக்கு அந்த தொழில் நல்ல தொழிலாக தெரியும். அந்த தொழிலில் இருப்பவருக்கு இந்த தொழில் சூப்பரான தொழிலாக தோன்றும். ஆனால் எல்லா தொழிலிலும் கஷ்டங்கள் உண்டு.

யாரும் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பிட வேண்டாம். அனைவரையும் சமமாக எண்ணுங்கள்.  அதனால் எந்த தொழில் என்று மதிப்பு கொடுக்காமல் உழைக்கும் ஒவ்வொருவருக்கும் மதிப்பு அளியுங்கள். உழைக்காமல் உயர  வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக முன்னேற முடியாது. பொய் பேசுவது, ஏமாற்றுவது மற்றும் திருடுவது, இது போன்ற பழக்கவழக்கங்கள் தான் தவறாகும். ஆனால் எந்த தொழிலும் குறைந்தவை அல்ல. எல்லோர் உழைப்பும் உயர்ந்தவை ஆகும்.


நன்றி,


என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 7 April 2013

ஞாபகசக்தி எங்கே போய் விட்டது ?



தொடர்ந்து பேராதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.

பல பேர் என்னிடம் கேட்கும் சில சந்தேகங்களில் இதுவும் ஒன்று. ஞாபக சக்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது, அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்கள். ஞாபக சக்தி என்பது ஒரு மிகப் பெரிய விஷயம் கிடையாது. கடவுள் படைப்பில் மூளை மிக அற்புதமாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் தவறாக உபயோகப்படுத்துவதால் மந்தத் தன்மை ஏற்படுகிறது.

முதலில் உடல் ரீதியாக பார்ப்போம்:
---------------------------------
1.நிறைய போதை தரும் பொருட்களை (Drinks, பான்) சாப்பிடுவது

2.சிகரெட் குடிப்பது மற்றும் பாக்கு போடுவது.

3.இரத்த ஓட்டம் மூளைக்கு சரியாக செல்லவில்லை என்றால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது (This is rare case)

4.சத்து குறைவாக இருப்பது.


மன ரீதியாக பார்ப்போம்:
-----------------------

1.ஒரு விஷயத்தில் Involvement இல்லாமல் இருப்பது. (எந்த விஷயம் செய்கிறோமோ அதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது)

2.Presence of Mind இல்லாமல் இருப்பது. (சுயநினைவோடு இல்லாமல் கற்பனையிலேயே இருப்பது மற்றும் எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது)

இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஞாபக சக்தி இருப்பதில்லை. மற்ற படி மூளை அருமையாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஞாபக சக்தி இல்லாமல் இல்லை அது உங்களிடம் தான் இருக்கிறது.

உடல் ரீதியாக குறை இருக்கிறதா? அல்லது மன ரீதியாக குறை இருக்கிறதா? என்று யோசித்து சரி செய்யுங்கள்.

ஞாபக சக்தி பெருக்கெடுத்து ஓடும்.

நன்றி,

என்றென்றும் அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 3 April 2013

ஏமாறாதே! ஏமாற்றாதே !!




நாம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் ஏமாற்றங்கள் அடைந்துள்ளோம். ஏமாற்றம் அடைந்த பிறகு அடிபட்டு திருந்தியிருப்போம். யாரையும் ஏமாற்றவும் கூடாது- ஏமாறவும் கூடாது. அதிலும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதை கூட யோசித்து யாருக்கு செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று தெளிந்து செய்ய வேண்டும். அதாவது தேவை அறிந்து தானம் செய்ய வேண்டும். ரோட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு பைசா கூட போட கூடாது. கை, கால்கள் நன்றாக இருக்கும் போது எதற்காக பிச்சை எடுக்க வேண்டும். அதை ஊக்கம் மூட்டுவது போல் நாமே செய்து விடக்கூடாது.

உண்மையில் ஒருவர் முடியாத நிலையில் இருக்கும் போது, அவருக்கு உதவி செய்யலாம். தானத்தில் பலவகை உண்டு பணம், ஆடை, உணவு, இரத்தம் என்று பலவகை உண்டு. அதிலும் சிறந்தது கல்வி செல்வம். ஒருவர் படிக்க வசதியில்லாத நிலையில் இருப்பவருக்கு, நன்றாக படிக்கும் ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு, படிக்க உதவி செய்யலாம். கல்வியை தந்துவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்மை செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். அவருடைய தலைமுறைக்கே நன்மை கிடைக்கும்.

அதனால் தானம் செய்யும் முன்பு சிறிது யோசித்து செய்வது மிகவும் சிறந்தது. தானம் செய்யும் பேரில் ஏமாறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 28 March 2013

தானம் செய்யும் எண்ணம் எப்படி வரும்?




பணம் தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன். சில பேர் பணத்தை உபயோகிப்பதே கிடையாது. அதுவும் தவறுதான். அதாவது "கருமி" தனம் இருப்பது மிகவும் கஷ்டத்தை கொடுக்கும். நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வந்தேன். "பணத்தோட அருமை எனக்கு தான் தெரியும்" என்று சொல்லி நிறைய வீட்டில் பணத்தை செலவு செய்வதே கிடையாது. பணத்தை சேர்த்து வைப்பதால் அனுபவித்த சுகம் இருக்காது. பணம் சம்பாதிப்பதே நமது தேவைகளுக்காகத் தான். அதை சரிவர உபயோகிக்க வேண்டும். 

நமது தேவைகளுக்காக செலவு செய்வது தவறில்லை. இன்று அனுபவிக்க வில்லை என்றால் நாளை ஏமாற்றத்தை தரும். போகும் போது எதையும் எடுத்துச்செல்லப்போவதில்லை.  எல்லாவற்றையும் விட்டுவிட்டுத்தான் செல்லப்போகிறோம். அதனால் அனுபவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். பணத்தை அனுபவிக்க கற்றுக்கொண்டால், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும். அதனால் மன அமைதி கிடைத்துவிடும்.

முதலில் நாம் நம் பணத்தை அனுபவிக்க தயங்கினால், தானம் செய்யும் எண்ணம் எங்கிருந்து வரும்?


எனவே தானும் அனுபவித்து பிறருக்கும் கொடுத்து உதவுவோம்.

நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 25 March 2013

யார் பணக்காரர் தெரியுமா?



நமது ஆசைகள் தான் கஷ்டத்தை தருகின்றன என்று சொல்லி இருந்தேன். ஆசை படாமல் இருக்க முடியுமா?. முடியாது, அப்படி ஆசைகள் கிடையாது என்று சொன்னால் அது பொய். பின்பு ஏன் ஆசைகள் தான் கஷ்டம் என்று கூறுகிறேன் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு உதாரணத்திற்கு வீடூ வாங்க வேண்டும் என்ற எண்ணம், அதாவது "ஆசை" இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாராளமாக வாங்கலாம் தவறில்லை. அதை வாங்குவதற்கு முன்னால் நாம் என்ன செய்கிறோம். நமக்கு தேவையான எல்லா வசதிகளும் அந்த வீட்டில் இருக்கிறதா என்று பார்க்கிறோம். வேறு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது கிடையாது.

வீடு  40 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். கையில் 20 லட்சம் இருக்கிறது என்று  வைத்துக்கொள்வோம். மீதி 20 லட்சத்துக்கு வட்டிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த வட்டியை நாம் மாதம் மாதம் கட்டமுடியுமா? அந்த நிலையில் இருக்கிறோமா என்று யோசியுங்கள். அப்படி அந்த வட்டியை கட்டினால் நமது Budget பிடிக்காமல் இருக்கிறதா? என்று யோசியுங்கள். உங்களால் முடியும் என்றால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை . ஆனால் கட்டமுடியாத நிலையில் இருக்கும் போது, அதை வாங்க ஆசைபட்டால் நிச்சயம் கஷ்டத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அந்த ஆசை தான் இருக்க கூடாது.

இது போன்று தான் எல்லா விஷயங்களில் தவறு செய்கிறோம். வரும் வருமானத்தை வைத்து சிக்கனமாக செலவு செய்து, நமது தேவைகளுக்காக சிலவற்றை செலவு செய்து மற்றும் சேமிப்பு செய்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது கடன் இல்லா வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று கூறுகிறேன். "இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொண்டால் அவன் தான் பணக்காரன்" என்பது உண்மையாகும்.


நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 22 March 2013

சுதந்திர பறவைகளாய் மாறுங்கள் !



 


மனிதனாய் பிறந்து எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. யாரிடம் கேட்டாலும் என்னால் கஷ்டங்களை தாங்கி கொள்ள முடியவில்லை என்று தான் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். ஆனால் கஷ்டங்களை விட்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?


அதாவது தவறு செய்வது இயற்கை. ஆனால் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது தான் குற்றம் ஆகும். குழந்தைகளாக பிறந்த உடனே, இந்த மண்ணில் காலடி பட்டவுடன் கஷ்டங்களை சந்திக்க தயாராகி விடவேண்டியிருக்கிறது. கஷ்டங்களுக்கு ஒரு அழகான விளக்கம் தரப்போகிறேன். குழந்தைகளாக இருக்கும் போது, அதாவது படிக்கும் காலத்தில் படிப்பது கஷ்டமாக இருந்து இருக்கும். கல்லூரி பருவத்தில் "காதல் பிரச்சனை" மற்றும் அட்வைஸ் கேட்பதே பிடிக்காத காலம். அந்த பருவத்தில், அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து இருக்கும்.

இது போல் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை தாங்க முடியவில்லை என்று தான் கூறுகிறோம். ஆனால் இதில் என்ன ஒரு உண்மை என்றால், நாம் கடந்து வந்த கஷ்டத்தை இன்று நினைக்கும் போது அது சிரிப்பாக கூட இருக்கும். இது மிகப்பெரிய உண்மை ஆகும். எல்லோரும் உங்களை ஆராய்ந்து பாருங்கள். அதனால் எதற்கும் கவலை படாதீர்கள். என்ன செய்யலாம் எப்படி face பண்ணலாம் என்பதை பற்றி யோசியுங்கள். உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வாருங்கள் ! சுதந்திர பறவைகளாய் மாறுங்கள் ! சந்தோஷம் அடையுங்கள் !

நன்றி
,

 
அன்புடன்
,
ஈஸ்வரி

Wednesday, 20 March 2013

எளிமை - இதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?



நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான மற்றொன்று எளிமையாக இருப்பது. "எளிமை" என்ற வார்த்தைக்கு நிறைய பேர் அர்த்தம் தெரியாமல் தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். எளிமை என்பது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். நம்மிடம் இருப்பதை அனுபவிப்பது அல்லது இல்லாததை நினைத்து வருந்தம் அடையம் இருப்பது. அது தான் எளிமை ஆகும். ஒரு உதாரணத்திற்கு உன்னிடம் 10 பவுன் தங்க செயின், ஒரு கார் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை அனுபவிப்பதில் தப்பில்லை. அது உன்னுடையது. அதை தாராளமாக அனுபவிக்கலாம். அதை அனுபவிக்காமல் எந்த நகையும் போட பிடிக்காது, காரில் போக கூட பிடிக்காது என்று சொல்லி எளிமையாக வாழ்வது என்று எண்ணி தவறு செய்கிறார்கள். ஆனால் அவருக்கு வேறு ஏதாவது ஒரு பொருள் மீது ஆசை இருக்கும் அதையே பிடித்துக் கொண்டு இருப்பார்கள். இல்லாததையே நினைத்து வருத்தம் அடைவதால், இருப்பதையும் அனுபவிக்காமல் தவற விட்டு விடுகிறோம். அதனால் இருப்பதை அனுபவியுங்கள்.


எளிமை என்பது ஆடை, ஆபரணங்களில் அல்ல, மனம் சம்மந்தப்பட்டது. உனது பேச்சில் உனது எளிமை தெரிந்து விடும். அதாவது உண்மை தான் எளிமை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும். ஒரு உதாரணத்திற்கு ஒருவருக்கு சொத்தின் மீது ஆசை இருக்கும். ஆனால் வெளியே சொல்லும் போது "எனக்கு எந்த ஆசையும் கிடையாது" என்று கூறுவார். உள்ளே தோன்றுவது ஒன்று, வெளியே சொல்வது ஒன்று. இது அவரையே அவர் ஏமாற்றிக் கொள்கிறார் என்று அர்த்தம். அதனால் எளிமையாக வாழ கற்றுக் கொண்டால் இறைவன் உங்கள் பக்கம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 18 March 2013

கஷ்டங்கள் குறைய வேண்டுமா?




நிறைய நண்பர்கள் என்னிடம் கேட்பது கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமது பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ளாதது தான். நல்லவர்களை எப்படி அறிந்து கொள்வது?.அது எந்த உறவாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, நல்லவர்களை நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.பொதுவாக நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது யாரிடமாவது சொல்லி மன ஆறுதல் அடைய முயற்சி செய்வோம். அப்படி நம் கஷ்டத்தை ஒருவரிடம் சொல்லும் போது அவர் நமக்கு நல்லதையே சொல்லி நம் மன பாரத்தை குறைத்து விடுகிறார் என்றால் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

2.வெறுமனே கஷ்டத்தை கேட்டுவிட்டு சென்றாலோ அல்லது இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுத்தினாலோ, அவரிடம் நட்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. 

3.அது போல் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கூறும் போது அவரும் சந்தோஷம் அடைய வேண்டும். மாறாக சந்தோஷம் அடையவில்லை என்றால் அவர்களுடைய எண்ணம் சரியில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

எனவே முதலில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொண்டு பின்பு பழகினால் உங்கள் கஷ்டங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 6 March 2013

எதையும் செய்யும் ஆர்வம் எப்படி வரும்?




நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று அடுத்தவரை ஊக்கப் படுத்துதல் ஆகும். ஆனால் அதை இன்று யாரும் செய்வதில்லை. யாரு எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை ஊக்கம் அளித்து பாருங்கள். அவர்கள் முகத்தில் பிரகாசம் தெரியும். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, வாய்விட்டு வெளியே மனதில் இருந்து பாரட்டுங்கள். முக்கியமாக யார் நல்ல விஷயம் செய்கிறார்களே அவர்களிடம் நேராக பாரட்ட வேண்டும். சில பேர் நேரடியாக சொல்லாமல் மற்றவர்களிடம் சொல்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதால், அவருக்கு எப்படி விஷயம் போய் சேரும். அப்படி நாம் மற்றவர்களிடம் ஊக்கம் கொடுக்கும் போது, நாமும் மகிழ்ச்சி அடைவோம் என்பது தான் உண்மை. மற்றவர்களை மகிழ வைக்க நினைக்கும் போது நாமும் மகிழ்ச்சி அடைவோம். சில பேர் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். வெளியே வாய்விட்டு பேசும் போது தான் பல விஷயங்கள் புரியும்.

ஒரு உதாரணத்திற்கு மனைவி செய்யும் சமையல் நன்றாக இருக்கும். ஆனால் ருசித்து மட்டும் விட்டு விட்டு போய்விடுவோம். அதற்கு பதிலாக அவரிடம் நேரிடையாக நீ செய்த சமையல் சூப்பர் என்று சொல்லுங்கள். அவர் முகத்தில் திருப்தி ஏற்படும். மறுநாள் இன்னும் நன்றாக சமைக்க வேண்டும் என்று தோன்றும். குறைகளை மட்டும் கண்டுபிடித்து வாழ்ந்து வருவதால் தான் கஷ்டங்கள் அதிகமாக தெரிகிறது. நிறைகளையும் கண்டு பிடிக்க கற்றுக் கொண்டால் போதும் எல்லோரையும் நம்வசம் இழுத்து விடலாம். வேலை செய்யும் இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி, உறவுகளிடமும் சரி இன்று முதல் ஊக்கம் கொடுத்து பாருங்கள், எல்லாக் கஷ்டங்களும் மறைந்து போகும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

நன்றி,


அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 4 March 2013

பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது?



பொறாமை ஒருவருக்குள் எப்படி வருகிறது என்பதைப்பற்றி பார்ப்போம். தனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் பொறாமையாக வெளிப்படுகிறது. கீழ்கண்ட நான்கு விஷயத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வார்கள்.

1. அழகு

2. அறிவு

3. புகழ்

4. பணம்

இதைத் தவிர வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் உண்மை என்ன என்றால் யாருமே தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தான். கடவுளின் படைப்பு அனைத்தும் உயர்வானவை தான். ஆனால் அதை அறிந்து கொள்ளாமல் தன்னைத்தானே தாழ்த்தி அழிவை தேடிக்கொள்கிறார்கள். பொறாமை மனம் கொண்டவர்கள் மனம் எப்போதும் துன்பத்திலேயே இருக்கும். இதுவே ஒரு பெரிய கொடுமையான விஷயம் ஆகும்.

ஆனால் தன்னை தாழ்வாக எண்ணாமல் உயர்வாக நினைக்க ஆரம்பித்துவிட்டாலே போதும் பொறாமை என்ற அரக்க குணம் வெளியேறிவிடும் என்பது தான் உண்மை.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 20 February 2013

பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது?




நாம் வாழும் வீட்டிலும் சரி, வெளியே வேலைக்கு செல்லும் இடத்திலும் சரி நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் மிகமிக முக்கியமான ஒன்று என்னவென்றால் "நம்மைவிட மற்றவர்கள் முன்னேற விடக் கூடாது"  என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர் என்பது தான். இதனால் எத்தனை பேர் மனநிலை பாதித்து வருகிறார்கள் தெரியுமா? மிக மிக கவலையான விஷயம் தான். இந்த பொறாமை என்ற கெட்ட குணம் இருந்தால் தான் "மற்றவர்கள் முன்னேற கூடாது" என்ற எண்ணம் வரும். 


பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது? நீங்கள் எவ்வளவு நல்ல விஷயத்தை செய்தாலும் சரி அதை விட்டுவிட்டு குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதாவது தவறை மட்டும் கண்டுபிடிக்கப் பார்ப்பார்கள். நீங்கள் செய்த நல்ல விஷயத்தை கண்டு மகிழ முடியாது. மனம் திறந்து பாராட்ட முடியாது. முகமே வாடிவிடும் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் நல்ல எண்ணம் இருக்காது. அதைக்கண்டு பல பேர் வருத்தம் அடைகிறோம்.

1. பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் உங்கள் வளர்ச்சியை சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் அவர்களிடம் கிடையாது. அதனால் அவர்களிடம் உங்களை நிருபிக்க தேவையில்லை.

2.பொறாமை எண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு தான் உங்களை குறைவாக நினைத்தாலோ அல்லது கெடுக்க நினைத்தாலோ அது நிச்சயம் நடக்காது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். நமக்கு என்ன கிடைக்க இருக்கிறதோ அது கண்டிப்பாக கிடைக்கும்.

3.அவர்களை இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினால் போதும் அவர்கள் வாயை அடைக்க செய்துவிடலாம்.(இதெல்லாம் சின்ன டிப்ஸ் தான்). இதையே உபயோகிக்க தேவையில்லை.

4.அதனால் அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை. அவர்கள் என்றும் முன்னேற மாட்டார்கள் என்பது தான் உண்மை.அவர்களின் நிலையை கண்டு பரிதாபப்படவேண்டும்.

ஆகவே நீங்கள் கவலையை விட்டு வெளியே வந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி




Sunday, 17 February 2013

திருப்தி எப்படி வரும் ?





நமது எண்ணங்கள் Positive-ஆக இருக்க என்ன செய்யலாம் என்று பார்த்தோம். நமது ஆசைகள் நிறைவேறவில்லையே என்று புலம்பி வெம்பி கொண்டு இருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறாகும். எல்லோருடைய ஆசையும் நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதை நாம் உணரவில்லை. ஏன் என்றால் ஒரு ஆசை நடந்தவுடன் அதை அனுபவிக்கும் முன் இன்னொரு ஆசை வந்துவிடுவது தான். இதை கவனித்தீர்கள் என்றால் போதும் பாதி கவலை சரியாகிவிடும். ஒரு உதாரணத்திற்கு, ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்பது பெரிய கவலை. பல நாட்கள் காத்திருந்தபின் ஆசை நிறைவேறும். ஆனால் குழந்தை பிறந்தவுடன், அதை அனுபவிக்கும் முன் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், இப்படி அடுத்து அடுத்து தொடர்ந்து வரும் ஆசைகள் தான் நம் கவலைக்கு காரணம். என்ன சொல்ல வருகிறேன் என்றால் குழந்தை கிடைத்ததை முழுமையாக் அனுபவியுங்கள் அப்படி அனுபவிக்காதலால் திருப்தி ஏற்படுவதில்லை. நமக்கு என்ன கிடைத்துக் கொண்டு இருக்கிறதோ அதை முழுமையாக அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

எதுவும் நமக்கு கிடைக்காமல் இல்லை. இதை படிக்கும் போது சற்று உங்களை திரும்பி பாருங்கள். என்னவெல்லாம் உங்களுக்கு கிடைத்ததோ அதை முழுமையாக அனுபவிக்கவில்லை என்று யோசியுங்கள் !. என்ன கிடைத்தது என்பது புரியவரும். ஆசைக்கு அளவே இல்லாமல் போகும் போது கவலைகள் அதிகம் ஆகிக்கொண்டே போகும் என்பது தான் உண்மை. இன்றில் இருந்து வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். எதை செய்தாலும் அதை ரசித்து ருசித்து செய்யுங்கள் மற்றும் அனுபவியுங்கள் உங்கள் வாழ்வு திருப்தி அடைய எனது நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 14 February 2013

அனைவரும் காதல் செய்து கொண்டு தான் இருக்கிறோம் !






காதல் என்பது மிகவும் புனிதமானது மற்றும் தெய்வீகமானது ஆகும். மனதராய் பிறந்த ஒவ்வொருவருகுள்ளும் காதல் மலரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. காதல் என்பது மூன்று வருடம் காதலித்தால் தான் காதலா என்ன?. ஒரு நொடி போதும் உள்ளே வருவதற்கு என்பதால் தான் வீட்டில் பார்த்து செய்து வைத்தாலும் கூட பெண் பார்க்க வந்த அந்த நிமிடத்தில் இருவருக்கும் பிடித்து விடுகிறது. காதல் திருமணம் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஏதுவாக இருந்தாலும் சரி காதல் ஏற்படுவது ஒன்று தான். அதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் காதல் எல்லோருக்கும் உள்ளே மலரும் விஷயம் ஆகும்.

அதனால் என்ன சொல்ல வருகிறேன் என்றால் காதல் செய்யும் நேரத்தில் அன்பு மனம் திறந்து இருக்கும். அது சில காலகட்டங்களில் மட்டும்  இருக்கும் பின்பு ego வந்தவுடன் எல்லோரும் சண்டை போட்டுக்கொள்வார்கள், அது காதல் திருமணம் செய்தவராக இருந்தாலும் சரி, வீட்டில் முடிவு செய்த திருமணம் ஆகி இருந்தாலும் சரி.

உண்மையான காதலர்கள் என்றும் பிரிய மாட்டார்கள். யாராலும் பிரிக்கவும் முடியாது. ஏன்னென்றால் அதற்கு அவ்வளவு சக்தி உண்டு. காதல் என்றால் தவறு என்று நினைத்து யாரையும் பிரிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசித்து தான் திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை மறந்து விடவேண்டாம். காதல் செய்பவர்கள் முழுமையாக மனதை மட்டும் நேசித்தால் நல்லது மற்றும் உண்மையானதும் கூட. ஆனால் அதில், ஜாதி, மதம், பணம், காமம், சுயநலம், இதெல்லாம் இருந்தால் யாரும் பிரிக்க தேவையில்லை அதுவே பிரிந்து போய் விடும் என்பது உண்மையாகும்.

அதனால் ego -வை மட்டும் எடுத்து விட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து இன்பமாக வாழ என் நல்வாழ்த்துக்கள்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 11 February 2013

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேவை .. .. ..



நாம் எல்லோரும் முன்னேறுவதற்கு Positive thoughts இருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, அதை ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம். காலையில் எழுந்தவுடனே நல்ல Positive energy கொடுக்கககூடிய விஷயங்களை கேட்கலாம். உதாரணத்திற்கு Hello FM 106.4 Chennai -ல் திரு.ஜெயராம் அவர்கள் தினமும் காலையில் 5.30 am to 7.00 am வரை ஆன்மீக கதைகள் மற்றும் சிந்திக்க தூண்டும் கதைகள் சொல்வார். அதை கேட்கலாம், அப்படி கேட்கும் பொழுது அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

நம் வீட்டில் இருக்கும் எல்லோரிடத்திலும் கலகலப்பாக மனம் விட்டு பேச வேண்டும். ஒருவரிடத்தில் இருக்கும் நல்ல பண்புகளைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக மனம் திறந்து பாராட்ட வேண்டும். நீங்கள் எப்படியோ அப்படியே திரும்பிவரும்.(Every action has an equal and opposite reaction) ஒரு உதாரணத்திற்கு ஒருவரை வழியில் சந்திக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் "ஏதோ இருக்கிறேன்", Life ஏதோ போகிறது என்று கூறினால் நாமும் அதையே கூறுவோம். அப்படி அல்லாமல் life-super -ஆக போகிறது என்று சொல்லுங்கள். அவரை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும். நாம் பேசும் பேச்சில் கூட உற்சாகம் காணப்பட வேண்டும். நல்ல விஷயங்கள் உள்ள புத்தகங்களை படியுங்கள். டி.வி-யில் பல நல்ல விஷயங்கள் இருக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். இவ்வாறு தொடர்ந்து பல நல்ல விஷயங்களை உள்ளே கொடுத்து வந்தால் மட்டும் நாம் Positive-வாக மாற முடியுமே தவிற வேறு வழியில்லை.

நேரத்தை வீணாக்காமல் நல்ல வழியில் பயன்படுத்துங்கள். பிறருடன் வீண் பேச்சு, அடுத்தவர்களை பற்றிய விமர்சனங்கள், முடிந்தவரை பேசுவதை தவிறுங்கள். வீட்டில் எல்லோரிடமும் நேரத்தை ஒதுக்கி அன்பு காட்டுங்கள். Positive thoughts உள்ளவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள்.

இதை செய்து வந்தாலே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தோன்றி விடும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

வாழ்த்துகளுக்கு நன்றி .. ..




இதுவரை வெளிவந்த என்னுடைய கருத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்த அன்பு வாசகர்களாகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

நீங்கள் அளித்த கருத்துகளை திருப்ப படித்து பார்ப்பது என்பது ஒரு இனிமை. ஏன் அதையே உங்களுடன் பகிர்ந்தால் என்ன என்று உங்களுடன் பகிர்கிறேன்.


puthiya ariya thagavalgal
thks for sharing

unmai nalla pathivu thanks

தேவையான பதிவு.

good work

எனது ஆத்மார்த்தமான "தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

accueaswari

it's a great service rendering to society.my appreciation and prey the almighty to shower all prosperous, wisdom, happiness and prosperity for ever.
accu classmate Parthashaarrathi


நல்ல பதிவு...தொடருங்கள் உங்கள் பணியை...கடவுள் ஆசீர்வாதம் உண்டு
NICE ARTICLE Dr

Today only i saw this blog. Very Good and useful informations you are giving thank you madam

Madam, all those commands looking Simplicity, Sweety and Rarity

இராஜராஜேஸ்வரி13 December 2012 21:53
ஒவ்வொருவருக்கும் ஒன்று பிடிக்கும். அது எது என்று கண்டு பிடியுங்கள். உங்களை நீங்களே திரும்பி பாருங்கள். மற்றவர்களை பார்ப்பதை தவிருங்கள். "மன அமைதி" கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.

சிறப்பான பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

நாம என்னதான் புள்ளி போட்டாலும் அவுங்கவுங்க கர்மவினையை அனுபவிச்சே ஆகனும் வேனும்னா temporary re leaf குடுக்கலாம் {கிரகங்கள் கன்னை மறைக்க முடியாதே?}இது என்னோட கருத்து மட்டும்

நல்ல விளக்கம் நன்றி

really interesting news...


இதயம் நிறைந்த
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

thank u mam


arumaiyaana pathivu vaazthukkal
"'
நம்மை நாமே உயர்வாக நினைக்க "'
intha positive thinking irukkuravangala pirarin poraamai parvai marrum kanneru ponravai baathikkaathu

but ithuve overa poitta superiority complex nu solluvaanga athu oruvagaiyaana mana viyaathiya aayidum



தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 7 February 2013

உன்னுடைய வளர்ச்சி உன் எண்ணத்தில் .. .. ..



நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கு எது மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றால் "Positive Thinking" இருக்க வேண்டும். எந்த வேலையில் இருந்தாலும் சரி அதை விரும்பி செய்ய வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் Positive -ஆக பார்க்க துவங்கிவிட்டால் கஷ்டமே இருக்காது. நாம் எண்ணும் எண்ணத்தில் கலந்து இருக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடும் அளவிற்கு சக்தி நம்முள் இருக்கிறது என்பது தான் உண்மை. நமக்குள் இருக்கும் Negative-ஐ தூக்கி எறிந்துவிட்டால், Positive Energy தானாகவே வந்துவிடும். ஒரு உதாரணத்திற்கு சில ஆசைகள் நிறைவேறவில்லை என்று வைத்துக்கொள்வோம், உடனே மனம் என்ன சொல்லும் "நான் நினைத்து எது நடந்து இருக்கிறது" என்று Negative-ஆக சொன்னால் அது தான் நடக்கும்.

ரஜினி சார் பார்த்தீர்கள் என்றால் பல actress -யுடன் நடித்தாலும் "ஐஸ்வர்யா ராய்" கூடத் தான் நடிக்க ஆசைப்பட்டார். உடனே நடந்து விட்டதா என்ன? அந்த ஆசை பல படங்களுக்கு பிறகு "எந்திரன்" படத்தில் தான் நிறைவேறியது. இன்னொரு உதாரணமாக பவர் ஸ்டாரை சொல்லலாம். அவரே அவர் பெயருக்கு முன் "பவர் ஸ்டார்" என்று பட்டம் போட்டு கொண்டார். அப்பொழுது அனைவரும் சிரித்தார்கள். இப்பொழுது உண்மையிலேயே "பவர் ஸ்டார்" ஆகி விட்டார். எண்ணங்கள் தான் வாழ்க்கை. அது போல நாமும் நம் எண்ணங்களை Positive -ஆக நினைத்து வாழ கற்றுக் கொண்டால் பல ஆசைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை. சினிமா வைத்து சொன்னால் நம்மவர்களுக்கு நன்றாக புரியும் என்பதால் கூறியுள்ளேன். பிறர் வந்து நம்மை Positive-ஆக சொன்னால் சந்தோஷம் அடைகிறோம். ஆனால் நாமே நம்மைப்பற்றி உள்ளே Negative-ஆக நினைத்தால் எப்படி இருக்கும்? எனவே எல்லோரும் எண்ணங்களை மாற்றி நம்மை நாமே உயர்வாக நினைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday, 5 February 2013

உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உங்களுக்குள்ளே !



இவ்வளவு நாளாக உடம்பைப் பற்றி பார்த்தோம். ஆனால் இனி மேல் மனதைப்பற்றி பார்க்கப்போகிறோம். உடம்பைப் பற்றிய சில நல்ல தகவல்களை தந்து தெளிவுபடுத்திய நான் மனதைப்பற்றி தெளிவு படுத்தப்போகிறேன். இன்றைய நாளில் மனகுழப்பத்தில் நிறைய பேர் சிக்கிக் கொண்டு Stress-க்கு தள்ளப்படுகிறார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் "ஆசை" தான் அடிப்படைக் காரணம். அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். எல்லோருக்கும் இருக்கும் ஆசை என்னவென்றால்  life-ல் நல்லபடியாக Settle-ஆக வேண்டும். பேர் புகழ் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் மிக முக்கியமான காரணம் ஆகும். இந்த இரண்டு விஷயத்திற்காக நாம் பல கஷ்டங்களை பட்டுக் கொண்டு இருக்கிறோம். இதில் என்ன ஒரு பெரிய விஷயம் நமக்கு மட்டும் தான் கஷ்டம் இருப்பதாக பலர் நினைப்பது தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கஷ்டம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டாலே போதும், நாம் கஷ்டத்தை விட்டு வெளியே வந்து விடலாம். 

ஆசைப்பட தெரிந்த நமக்கு கஷ்டத்தை எதிர்கொள்ளும் சக்தியும் வேண்டும். நம்முடைய கஷ்டத்திற்க்கு யாரும் காரணம் அல்ல Including God. ஆசை எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் கஷ்டங்கள் இருக்காது. இப்பொழுது இது உண்மையா இல்லையா? என்று ஒரு நிமிடம் எல்லோரும் உங்களை திரும்பி பாருங்கள். அது எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி. அதற்கு நீங்கள் தான் காரணம் என்பது புரியும். அப்படி இல்லை என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது என்றால், ஈகோ இருக்கிறது என்று அர்த்தம். அதை முதலில் தகர்த்தெரியுங்கள், ஒப்புக்கொள்ளுங்கள். மனம் லேசாக மாறிவிடும்.

எந்த பிரச்சனைகளில் இருந்தும் நாம் வெளியே வரமுடியும், நாம் நினைத்தால் மட்டும் !


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Monday, 4 February 2013

சத்துக்களாக மாற்றப்படும் பிரமாண்டம் .... ... ..



நாம் உண்ணும் பலவகையான உணவுகளை அரைத்து Gulcose ஆக மாற்றுவதற்கும், சத்துக்களை எடுப்பதற்கு நம் உடல் உறுப்புகள் எவ்வளவு சிரமப்படுகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன? நல்ல உணவுகளை பார்த்து உள்ளே கொடுப்பது மட்டும் தான். அதைக் கூட நாம் செய்ய கஷ்டப்படுகிறோம். இது வரை நாம் பார்த்ததில் இருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்றால் நல்ல சத்துக்கள் கொடுத்தால் நோய் வராமல் தடுக்கலாம் என்பதைப்பற்றி தான். எனவே கொடுக்கும் பொழுது நல்ல உணவுகளை மட்டும் கொடுங்கள். மீதத்தை அது பார்த்துக் கொள்ளும்.

எவ்வளவு அழகாக பிரித்து எடுக்கிறது என்று பாருங்கள். காலையில் காபியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை எவ்வளவு கொடுத்தாலும், அதில் நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து கழிவுகளை வெளியேற்றிவிட்டு மீதத்தை மட்டும் சத்துப் பொருளாக மாற்றி நமக்குக் கொடுக்கிறது. இதை ஒரு நிமிடம் நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

இனி வரும் படைப்புகளில், மனதை பற்றி கூற இருக்கிறேன். உடம்பை பற்றி வேறு எதாவது சந்தேகங்கள் இருந்தால் E-Mail அல்லது Phone -ல் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.

நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Wednesday, 30 January 2013

நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்?



நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. Temprorary Relief மட்டுமே.

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை
நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?. இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, Gas Trouble என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும். எனவே Gastric Juice சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும். நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு அக்குபஞ்சர் Needle போட்டால் விரைவாக சரி செய்யலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 27 January 2013

உடம்பில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்வது?



உடம்பில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் பற்றி பார்க்கலாம். இன்றைய தினத்தில் நிறைய பேருக்கு அரிப்பு காணப்படுகிறது.  நிறைய Test எடுத்து பார்த்த பின்பும் எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் நிறைய பேர் தினமும் அரிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம். அது தெரிந்து விட்டால் அதை எளிதாக சரி செய்து விடலாம்.


1.உடம்பில் சத்து குறைபாடு (Vitamins and Minerals and Calcium)  இருந்தால் அரிப்பு ஏற்படும்.

2.கிருமிகள் அதிகம் காணப்பட்டால் தோலில் அரிப்பு ஏற்படும் (Blood Test பார்த்தால் தெரிந்துவிடும்)

3.சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும் போது அரிப்பு ஏற்படலாம்.

4.நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கூட அரிப்பு ஏற்படலாம்.


இதில் எது நமக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு செயல்பட்டால் அரிப்பை சரிசெய்துவிடலாம். இதனோடு அக்குபஞ்சர் Needle போட்டால் விரைவாக சரி செய்யலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Tuesday, 22 January 2013

வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா?





வாசகர்கள் அதிகமாக கேட்ட விஷயங்களில் ஒன்று.  எப்படி வயிறு தொப்பையை குறைப்பது? என்பதுதான். எனவே அதைபற்றி இங்கே சில விஷயங்களை தெரிவித்துள்ளேன்.

1. மிக மிக முக்கியமான விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை.

2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time-க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம்.

3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது.

4.Fast Food -சாப்பிடக்கூடாது.

5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும்.

பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும்.

மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்து Fasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting  இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி கடைபிடித்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள். இதையெல்லாம் கடைபிடித்து மற்றும் அக்குபக்ஞ்சர் Needle போட்டுக் கொண்டால் சரி செய்து விடலாம்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Sunday, 20 January 2013


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது:

மனிதப்பிறவி என்பது கிடைத்தல் அரிது. அதை அடைவதற்கே நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஔவை கூறுவார்கள் இந்த உலகத்தில் அரிது எது என்று!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தவம் கிடைத்துவிட்டால் அதற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார்கள்.

பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புலுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய் கணங்களாய் வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல கஷ்டங்களை கடந்து 7 அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். அந்த 7 வது அறிவு என்பது தான் "ஞான அறிவு" ஆகும்

அந்த 7ஆம் அறிவை கொண்டு யோசித்து செயல்படவேண்டும். 7ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் ஆசை, பணம், புகழ் போன்றவற்றிக்கு நாம் நம்மை அற்பனித்துக் கொள்ள மாட்டோம். 7 ஆம் அறிவு செயல்பட தொடங்கிவிட்டால் இதையெல்லாம் கடந்து நம்முள் இருக்கும். சக்தியை உணர தொடங்கிவிடுவோம். அதாவது சுறுக்கமாக சொன்னால் "உடம்புக்கும், மனதுக்கும் முக்கியதுவம் கொடுக்க தொடங்கிவிடுவோம்". எனவே கிடைத்த இந்த பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாக பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Friday, 18 January 2013


மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க ... ... ...


மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று Calcium குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது. எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே Calcium குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே Calcium சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம். அதனோடு அக்குபஞ்சர் Needle போட்டுக் கொண்டால் மூட்டு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகனையும் சரி செய்ய் முடியும் என்பது உண்மையாகும்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி

Thursday, 17 January 2013


நோய் உருவாகும் விதம்:


நமக்கு நோய் பொதுவாக மூன்று வகைகளில் பிரச்சனை தரும். அது எது என்றால் தசைகள், எலும்புகள் மற்றும் நரம்புகள். இதை தவிர்த்து  வேறு ஏதாவது வரப்போகிறதா என்ன? முதலில் சத்து குறைபாடு ஆகிறது என்றால் தசைகளில் தான் பிரச்சனையை காட்டும். உடல் சோர்வு, தசைகளில் வலி என்றாலே தெரிந்து கொள்ளலாம் நோய் ஆரம்பம் ஆகப்போகிறது என்று!. உடனே சத்துள்ள பொருட்களை சாப்பிட்டாலே சரி செய்துவிடலாம். இல்லை என்றால் அடுத்து அதிகமாக குறைபாடு ஆகும் போது எலும்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பின்பு மன உளைச்சல் ஏற்பட்டு
தூக்கமில்லாமல் கனவுத்தொல்லை முதலியன ஏற்படும். இதனால் அதிகமாக யோசிக்கும் போது நரம்புகள் பாதிப்பு ஏற்படும். எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை ஆகும். கவிஞர் வைரமுத்து அவர்கள் காதலை அழகாக கூறுவார் "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்பார். அது போல் நான் கூறுவது என்னவென்றால், "தசையில் ஆரம்பித்து, எலும்பின் வழியாக கடைசியில் நரம்பின் வழியே முடிவது தான் நோய்". விளக்கம் மனதில் தங்கட்டும் என்பதற்காக கொஞ்சம் வைரமுத்துவை இழுத்துள்ளேன்.

எனவே உடம்புக்கு அக்கறை காட்டுங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி,

அன்புடன்,
ஈஸ்வரி